ரஜினிகாந்துடன் கொலைவெறியுடன் மோதிய தீபிகா படுகோனே
சென்னை: கோச்சடையான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோனே மோதும் சண்டை காட்சி ஒன்று உள்ளதாம்.
ரஜினிகாந்த் மற்றும் தீபிகா படுகோனே ஜோடி சேர்ந்துள்ள கோச்சடையான் பட வேலைகள் முடிந்துவிட்டது. படத்தின் இசை வெளியீடு இந்த மாதமும், ரிலீஸ் ஏப்ரல் மாதமும் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் படம் வரும் ஜூலை மாதம் தான் ரிலீஸ் ஆகும் என்று தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா எடுத்துள்ளார். ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் ஹீரோ ரஜினி, ஹீரோயின் தீபிகாவுடன் காதல் மட்டும் செய்யவில்லை என்பது தெரியுமா?

ரஜினியுடன் மோதும் தீபிகா
கோச்சடையானில் ரஜினிகாந்த், தீபிகா இடையே பயங்கர சண்டை காட்சி ஒன்று உள்ளது என கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

லண்டனில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி
ரஜினி-தீபிகா மோதும் காட்சி லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை காட்சி படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும் என்கிறார் ரவிக்குமார்.

ரசிகர்களை அசரவைக்கும் சண்டை
ரஜினியும், தீபிகாவும் மோதும் காட்சி ரசிகர்கள் அசரவைத்துவிடும் என்று ரவிக்குமார் தெரிவித்தார்.

ஃபிட்டான ரஜினிகாந்த்
அனைத்து சண்டைக் காட்சிகளும் அவுட்டோரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த காட்சிகளில் ரஜினிகாந்த் செம ஃபிட்டாக இருப்பாராம்.


Click it and Unblock the Notifications











