twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இல்லையாமே... தர்பார் நஷ்டம் காரணமாக சம்பளத்தை பாதியாகக் குறைத்தாரா, ரஜினிகாந்த்?

    By
    |

    Recommended Video

    RK Selvamani Speech About Darbar Loss | Vijay House IT Raid

    சென்னை: தர்பார் நஷ்டம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளதாக வந்த தகவலை, ரஜினி தரப்பு மறுத்துள்ளது.

    ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள தர்பார் படம், ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இதில் நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது.

    ஆஸ்கர் 2020: தென்கொரியாவின் மின்சாரக் கண்ணா.. விருதுகளை குவித்த பாராசைட்டின் பரபர பின்னணி!ஆஸ்கர் 2020: தென்கொரியாவின் மின்சாரக் கண்ணா.. விருதுகளை குவித்த பாராசைட்டின் பரபர பின்னணி!

    ரூ.150 கோடி வசூல்

    ரூ.150 கோடி வசூல்

    படம் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே ரூ.150 கோடி வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் இந்தப் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்று சில விநியோகஸ்தர்கள் புகார் கூறினர். பின்னர் தங்களுக்கான நஷ்டத்தை திருப்பித் தரவேண்டும் என்று லைகா நிறுவனத்திடம் முறையிட்டனர். அவர்கள், படத்தை நஷ்டத்தில்தான் ரிலீஸ் செய்துள்ளோம், அதனால் தர இயலாது என்று கைவிரித்துவிட்டார்களாம்.

    இயக்குனர் முருகதாஸ்

    இயக்குனர் முருகதாஸ்

    இதையடுத்து ரஜினிகாந்தை சந்தித்து முறையிட முடிவு செய்தனர். அவரை சந்திக்க முடியவில்லை. பின்னர் இயக்குனர் முருகதாஸ் அலுவலகத்துக்குச் சென்று கேட்டனர். அவர் அங்கு இல்லாததால், திரும்பிவிட்டனர். இந்நிலையில், தன்னை சில வினியோகஸ்தர்கள் மிரட்டுவதால தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என முருகதாஸ் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    சன் பிக்சர்ஸ்

    சன் பிக்சர்ஸ்

    இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தனது 168-வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

    சம்பளத்தை பாதியாக

    சம்பளத்தை பாதியாக

    இதற்கிடையே, தர்பார் நஷ்டம் காரணமாக தனது சம்பளத்தை ரஜினிகாந்த் பாதியாக குறைத்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவா இயக்கும் படத்துக்கு ரஜினிகாந்த் சம்பளம் ரூ.116 கோடி பேசப்பட்டதாகவும் தர்பார் நஷ்டமடைந்துள்ளதாக பாதியாக குறைக்க வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் கேட்கப்பட்டதாகவும் அதை ஏற்று ரூ. 58 கோடியாக தனது சம்பளத்தை ரஜினிகாந்த் குறைத்துக்கொண்டதாகவும் செய்தி வெளியாயின.

     ரஜினி தரப்பு மறுப்பு

    ரஜினி தரப்பு மறுப்பு

    இந்நிலையில் இதை நடிகர் ரஜினிகாந்த் தரப்பு மறுத்துள்ளது. ரஜினிகாந்தின் சம்பள விவகாரம் பற்றி தெரியாது என்றும் ஆனால், தர்பார் நஷ்டம் காரணமாக சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துவிட்டதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் சம்பளத்தை குறைக்க அவரிடம் யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் கூறப்படுகிறது.

    English summary
    Actor Rajinikanth denied the rumor that he had reduced his remunaration by 50 percent for his 168 film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X