ஒடிசா ரயில் விபத்து : வாய் திறக்காத ரஜினி.. இரங்கல் தெரிவித்த சிறிய நடிகர்கள்!
சென்னை: நாட்டையை நடுங்க வைக்கும் வகையில் ஓடிசாவில் மிகப்பெரிய ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கொடூர விபத்திற்கு உலகத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்து : ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப்பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்றிரவு நடந்த இந்த விபத்தில் சிக்கி, இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அடையாளம் காணமுடியவில்லை : விபத்து நடந்த பகுதியில் ரயில்வே துறை மீட்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, தற்போது பாதையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது . மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காண முடியாத அளவிற்கு முகம் சேதமடைந்துள்ளதால், பலரை அடையாளம் காண முடியவில்லை. மேலும் விபத்து நடந்த பகுதிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்றுள்ளார்.

என்ன கொடுமை இது : நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த கோர விபத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,''நெஞ்சு பதைபதைக்கிறது.. என்ன கொடுமை இது'' இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நெஞ்சம் பதறுகிறது : அதே போல, ராகவா லாரன்ஸ் தனது இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்"என தெரிவித்துள்ளார்.
வாய் திறக்காத ரஜினி : நடிகர் கமல்ஹாசன், நடிகர் ஆர்யா, அருண் விஜய், கவிஞர் வைரமுத்து, நடிகை பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால், நடிகை கீர்த்தி சனோன், ராஷ்மிகா மந்தனா, சல்மான் கான், அக்ஷய் குமார், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் இரங்கலை தெரிவித்துள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த விதமான இரங்கலையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார். அதேபோல விஜய், சூர்யா, தனுஷ் போன்றவர்களும் இரங்கலை தெரிவிக்காமல் இருப்பது இவரது ரசிகர்களிடம் ஒரு வித கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











