Rajinikanth Jailer - ரஜினிகாந்த்தை கழற்றிவிட்ட முதலமைச்சர்.. நல்ல வேளை அது மட்டும் நடக்கல.. ரசிகர்கள் நிம்மதி

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் பார்க்கப்போகிறார் என்ற தகவல் வெளியானது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடிப்பில் ரிலீஸாகியிருக்கும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பான் இந்தியா ஸ்டார்கள் முதல் உள்ளூர் ஸ்டார்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் கடந்த பத்தாம் தேதி வெளியானது. வரிசையாக இரண்டு படங்களின் தோல்வியால் துவண்டிருந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்தப் படத்தின் மூலம் எழுச்சி பெற்றுவிட காத்திருந்தனர்.

Rajinikanth did not watch Jailer movie with Uttar Pradesh Chief Minister Yogi Adityanath

சூப்பர் ஹிட்: அவர்களது எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துவிட்டது. நெல்சனின் டார்க் காமெடி, ரஜினியின் மாஸ் என கலந்துகட்டி பக்கா கமர்சியல் பேக்கேஜாக படம் உருவானது. முக்கியமாக படத்தின் பல இடங்களில் ரஜினிகாந்த்தை பார்க்கும்போது விண்டேஜ் ரஜினிகாந்த் நினைவில் வந்து போனதாகவும்; இந்தப் படத்தின் மூலம் தலைவர் கம்பேக்க் கொடுத்துவிட்டார் என்றும் சிலாகிக்கின்றனர் ரசிகர்கள்.

வசூல் மழை: படத்தின் வசூல் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. அதன்படி படமானது முதல் வாரத்தின் முடிவிலேயே 450 கோடி ரூபாய் வசூலித்துவிட்டது. விக்ரம் படத்தின் மொத்த வசூலை முறியடித்துவிட்டது என பேசப்பட்டது. ஆனால் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் ஒரு வாரத்தின் முடிவில் 375 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிவித்தது. ரஜினி ரசிகர்கள் இதன் காரணமாக மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இமயமலை பயணம்: இதற்கிடையே படம் வெளியாவதற்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலை சென்றார். பட ரிலீஸுக்கு முன்னதாக ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றால் அந்தப் படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கை பல காலமாகவே அவரது ரசிகர்களுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் படம் ஹிட்டானதற்கு ரஜினியின் இமயமலை பயணமும் ஒரு காரணம் என சிலர் கூறிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க இமயமலை பயணத்தை முடித்துகொண்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth did not watch Jailer movie with Uttar Pradesh Chief Minister Yogi Adityanath

ஆளுநருடன் சந்திப்பு: இமயமலை பயணத்தை முடித்த ரஜினிகாந்த் ஜார்க்கண்ட் ஆளுநரை சந்தித்தார். இதனையடுத்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படத்தை அவர் பார்க்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ரஜினிகாந்த்துடன் படம் பார்க்க முதலமைச்சர் செல்லவில்லை என்றும் துணை முதலமைச்சர்தான் செல்கிறார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த்துடனான சந்திப்பை மட்டுமே யோகி ஆதித்யநாத் நிகழ்த்தவிருக்கிறார் என்றும் தெரிகிறது.

ரசிகர்கள் நிம்மதி: முன்னதாக, யோகி ஆதித்யநாத்துடன் ரஜினி படம் பார்ப்பதாக வெளியான தகவலை அடுத்து பலரும் விமர்சனத்தை எழுப்ப தொடங்கினர். மேலும், தனக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாக ரஜினிகாந்த் ஏற்கனவே கூறியதை எல்லாம் எடுத்துப்போட்டு சமூக வலைதளங்களில் அடிக்க ஆரம்பித்தனர். இதனால் ரஜினி ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர்.தற்போது முதலமைச்சருடன் படம் பார்க்கவில்லை என்று கூறப்படுவதால் அவர்கள் சற்று நிம்மதியடைந்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X