கமலுக்கு உயிர் நண்பனிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்து இன்னும் வராதது ஏன்?காரணத்தை கேட்கும் ரசிகர்கள்!

சென்னை : நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கமல்ஹாசனுக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பலரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், உயிர் நண்பனிடமிருந்து இன்னும் ஏன் வாழ்த்து வரவில்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

உலகநாயகன் பிறந்தநாள்

உலகநாயகன் பிறந்தநாள்

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய திரை உலகின் தலைசிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

உயிர் நண்பன் வாழ்த்தவில்லை

உயிர் நண்பன் வாழ்த்தவில்லை

பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் உயிர் நண்பன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் 16 வயதினிலே படத்தில் கமல் சப்பாணி கதாபாத்திரத்திலும், ரஜினி பரட்டை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அந்த படத்தைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகிறது, ஆடுபுலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

ஆசையை விதைத்த கமல்

ஆசையை விதைத்த கமல்

ரஜினியின் நடிப்பை பார்த்த கமல் நீங்கள் ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது என்று பல முறை கேட்டுள்ளார். ரஜினி மனதில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையை விதைத்ததே கமல் தான். இதையடுத்து, ரஜினி தேடி வந்த கதாநாயகன் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஒருபுறத்தில் கமல் நடித்து வந்த படங்கள் சூப்பர் ஹிட். மற்றொரு புறம் ரஜினி நடித்து வந்த படங்கள் மெகா ஹிட். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகத் தொடங்கியது.

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள்

ரஜினி ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்குமே போட்டி இருந்து வந்ததே தவிர, ஒருபோதும், கமலுக்கும், ரஜினிக்கும் போட்டி இருந்தது இல்லை. இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இன்று வரை நிலவி வருகிறது. இருவரும் 68 வயதை கடந்தாலும், இன்றைக்கு வரைக்கும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால், கமலின் பிறந்த நாளான இன்று ரஜினி ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X