Rajinikanth: விஜயகாந்த் எல்லோர் மீதும் கோபப்படுவார்.. அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை: "வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நின்றவர் யார்.. விஜயகாந்த்" என விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கி உள்ளது. விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்ததும் ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு நேற்று ரஜினிகாந்த் சென்னைக்கு புறப்பட்டார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.

ஒரு முறை பழகி விட்டால் போதும் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். நண்பர்கள் மீதும், குடும்பத்தினர் மீதும், அனைவர் மீதும் விஜயகாந்த் கோபப்படுவார். ஆனால், அவர் மீது யாருமே கோபப்பட மாட்டார்கள். ஏன்னா, அவர் கோபத்தில் கூட ஒரு நியாயம் இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று பேசினார்.

Rajinikanth directly visits and pays final respect to Vijayakanth

விஜயகாந்த் மறைவு: 1952 ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் பிறந்து வளர்ந்த விஜயராஜ் தமிழ் சினிமாவில் விஜயகாந்தாக மாறி ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து நடிகர் சங்கத்தை மீட்டுக் கொண்டு வந்து தமிழ் சினிமாவின் கேப்டனாக மாறினார். கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போதே தைரியமாக அரசியல் களத்தில் குதித்து மக்களுக்காக நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும் என தேமுதிகவை உருவாக்கியவர் விஜயகாந்த். சிறுநீரக பிரச்சனை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி: வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வந்த ரஜினிகாந்த் நாகர்கோயிலில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த போதே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சகோதரர் விஜயகாந்த் மறைவு தன்னை ரொம்பவே மனவேதனை கொள்ளச் செய்தது என்றார். இந்நிலையில், இன்று காலை சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் திருவுடலுக்கு நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளார் ரஜினிகாந்த்.

மகனுக்கு ஆறுதல்: கேப்டன் விஜயகாந்த் திருவுடலுக்கு கடைசியாக அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் கைகளை பிடித்தும் ஆறுதல் கூறினார். அதன் பின்னர் மீடியாவை சந்தித்து விஜயகாந்த் பற்றி உருக்கமாக பேசினார்.

ரஜினிகாந்த் பேச்சு: ஒரு முறை பழகினால் விஜயகாந்த் அன்புக்கு அனைவருமே அடிமை; விஜயகாந்த் அனைவர் மீதும் கோபப்படுவார். நண்பர்கள் மீது, உறவினர் மீது, மக்கள் மீது கூட, ஆனால், அவர் மீது யாரும் கோபப்பட மாட்டார்கள். விஜயகாந்த் கோபத்துக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கும். விஜயகாந்த் தைரியத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமானவர்.

ராமசந்திரா மருத்துவமனையில் நான் உடம்பு சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அப்போ ரசிகர்கள் ஹாஸ்பிடல் முழுவதும் சூழ்ந்துக் கொண்டு பெரிய கூட்டம் கூடிட்டாங்க, என்ன செய்றதுன்னே என் குடும்பத்துக்கு தெரியல, அங்கே வந்த விஜயகாந்த் என்ன பண்ணுனார் என தெரியலை.. ஒரு செகண்ட்ல மொத்த கூட்டத்தையும் விரட்டி அடித்து விட்டார்.

இங்கே பக்கத்துல எனக்கும் ஒரு ரூம் போடுங்க, நான் பார்த்துக்கிறேன் என சொன்னவர் விஜயகாந்த். அவர் உண்மையாகவே ஒரு கேப்டன் தான் எத்தனை ரன்கள், எத்தனை செஞ்சுரிக்கள் அடிக்க முடியுமோ சினிமாவிலும் அரசியலிலும் அவர் அடித்து சாதனை புரிந்து விட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ரஜினிகாந்த் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X