வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. அந்த தப்பை மறுபடியும் ரஜினிகாந்த் பண்ண மாட்டாராம்.. சம்பவம் இருக்கு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கபட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜெய்பீம் படத்தை இயக்கி ஆஸ்கர் கதவுகளையே தட்டிய இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் வெளியான மனசிலாயோ பாடல் மற்றும் ஹண்டர் வண்ட்டார் செகண்ட் சிங்கிள் புரமோவும் ஏற்கனவே சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை அள்ளியுள்ளன. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு தான் அந்த படத்திற்கு பெரும் ஹைப்பை கொடுத்து 600 கோடி வசூலை வாரிக் குவித்தது. அதே போல இன்றைய நிகழ்ச்சியிலும் ரஜினிகாந்த் பேசுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்டையன் ஆடியோ லாஞ்ச்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு எந்தவொரு தடையுமின்றி தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. ஜெயிலர், லால் சலாம் ஆடியோ லாஞ்சை தொடர்ந்து இன்று வேட்டையன் படத்திற்கான ஆடியோ லாஞ்சையும் பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். லைகா நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை நேரு ஸ்டேடியத்தில் தீவிரமாக கடந்த சில நாட்களாக நடத்தி வருகிறது.
பலத்த பாதுகாப்பு: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர் என பான் இந்தியா பிரபலங்கள் பலரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ள நிலையில், அதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சிக்கு மட்டுமே மீடியாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடியோ லாஞ்ச் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எனக் கூறுகின்றனர்.
ரஜினியின் குட்டி கதை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா - கழுகு கதையை சூப்பர் ஸ்டார் பேசிய நிலையில், காக்கா என விஜய்யை தான் சொல்கிறார் என பெரும் சர்ச்சை கிளம்பியது. ரஜினிகாந்த் ரசிகர்களும் உற்சாகமாகி அந்த படத்தை மிகப்பெரிய வெற்றிபெற செய்தனர். ஆனால், லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யையும் தன்னையும் ஒப்பிட்டு பேச வேண்டாம். நான் விஜய்க்காக அதை சொல்லவில்லை என விளக்கம் கொடுத்திருந்தார். மேலும், ரஜினிகாந்த் சங்கி அல்ல என அவரது மகள் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. லால் சலாம் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது.
அந்த தப்பை மறுபடியும் பண்ண மாட்டார்: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசியது போல ரஜினிகாந்த் சமரச பேச்சுவார்த்தைகளை இன்று நடைபெறவுள்ள வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பேச மாட்டார் என்றும் கண்டிப்பாக மற்ற நடிகர்களை சீண்டும் விதமான பேச்சுக்கள் மறைமுகமாக இருந்தால் தான் வேட்டையன் படத்தின் ஹைப் எகிறும் என்றும் சோஷியல் மீடியாவில் ரஜினிகாந்த் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று நடைபெறவுள்ள வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக பெரிய சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











