இயக்குநர் காலில் விழுந்த ரஜினிகாந்த்.. பழசை மறக்காத குணம்.. இந்த வயதிலும் இப்படியா?.. சூப்பர் ஸ்டார் சூப்பர்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கூலி பயங்கரமான தோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார் ரஜினி. இப்படத்தையும் முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173ஆவது படத்தில் கமிட்டாகியிருக்கிறார். 75 வயதிலும் பிஸியாக நடித்துவரும் ரஜினி செய்த செயல் ஒன்று பார்ப்போரை நெகிழ்வடைய செய்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த கூலி திரைப்படத்தை ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். தனது நண்பர்கள் கமலுக்கு எப்படி விக்ரம் படத்தை லோகி மெகா ஹிட்டாக கொடுத்தாரோ அதேபோல் தனக்கும் நடக்கும் என்றுதான் நினைத்தார். ஆனால் ஒட்டுமொத்தமாக இயக்குநர் சொதப்பி வைக்க; படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி சரியான ட்ரோலையும் சந்தித்து சூப்பர் ஸ்டாருக்கு கெட்ட கனவாகவே மாறிவிட்டது அப்படம்.
அடுத்த படங்கள்: கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இந்த வருடத்தில் படம் ரிலீஸாகிவிடும். நிச்சயம் முதல் பாகம் போன்றே இதுவும் மெகா ஹிட்டாகும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. ஜெயிலர் 2வை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த வருடத்தில் ஷூட்டிங்கை முடித்து அடுத்த வருடம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பிஸி: 75 வயதில் சினிமாவில் பிஸியாக நடித்துவரும் அவர்; நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். அந்தவகையில் மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உருவப்பட திறப்பு நிகழ்வு சென்னையில் நடந்தது. அதில் ரஜினி, கமல்ஹாசன், முதலமைச்சர், மு.க. ஸ்டாலின், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி வந்தபோது அவர் செய்த செயல் ஒன்று நெகிழ்வடைய செய்திருக்கிறது.
என்ன செய்தார்?: அதாவது விழா அரங்குக்குள் அவர் வந்தபோது அனை
வருமே எழுந்து நின்று அவரை வரவேற்றார்கள். கமல்ஹாசனை பார்த்து கட்டியணைத்த ரஜினி, முத்துராமனை பார்த்ததும் உடனே அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அதனைப் பார்த்த ரசிகர்கள், ரஜினிக்கு இருக்கும் புகழுக்கும், வயதுக்கும் இதை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் தனக்கு ஆறிலிருந்து அறுபதுவரை, முரட்டுக்காளை என ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குநரை பார்த்ததும் பழசை மறக்காமல் புதுமுக நடிகர் போல் நடந்துகொண்ட விதம்தான் அவரை இன்னும் சூப்பர் ஸ்டாராக வைத்திருக்கிறது என சிலாகித்துவருகிறார்கள்.
ரஜினியின் பேச்சு: முன்னதாக, விழாவில் எமோஷனலாக பேசிய ரஜினி, "ஏவிஎம் தயாரிப்பில் நான் 11 படங்கள் செய்திருக்கிறேன். சினிமா மட்டுமின்றி எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரவணன் சார் எனக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். மண்டபம் கட்டுவதற்கு, வீட்டுக்கு அருகில் இருக்கும் நிலத்தை வாங்குவதற்கு என ஏராளமாக உதவியிருக்கிறார். கருணாநிதி, ஏவிஎம் சரவணன் எல்லாம் என்னுடைய அசையா சொத்துக்கள். அவர்கள் போன பிறகு அனாதையாக உணர்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











