Rajini: 100 ஜென்மம் எடுத்தாலும் ரஜினிதான்.. சூப்பர் ஸ்டார் எமோஷனல் பேச்சு.. கமல் மாதிரி கவிதையா பேசிட்டாரே!
கோவா: தமிழ் சினிமாவின் அடையாளம், இந்திய சினிமாவின் புகழ் என கடந்த 50 ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. வணிக ரீதியாக வெற்றிகள் தொடங்கி, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். இப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு 56வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற பின்னர் அவர் பேசியது அவரது ரசிகர்களை மிகவும் எமோஷனலாக்கி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1975ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் கூலி. அடுத்து வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இதுவரை 171 படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் 2 அவரது 172வது படம். 173வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தனது மொத்த குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். விருதைப் பெற்ற பின்னர் அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த் பேச்சு: அதாவது, " நான் கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் எனது திரைப்பயணத்தை திரும்பிப் பார்த்தால், ஏதோ 10, 15 ஆண்டுகளாக இருப்பது போலத்தான் உள்ளது. அதற்கு காரணம் எனக்கு சினிமாவின் மீது இருக்கும் ஈர்ப்புதான். நான் சினிமாவை விரும்புகிறேன், நடிப்பதை விரும்புகிறேன். நான் 100 ஜென்மங்கள் எடுத்தாலும் நடிகராகத் தான் பிறக்க விரும்புகிறேன். அதுவும் ரஜினிகாந்தாகத்தான் பிறக்க விரும்புகிறேன். இந்த விருதை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. இந்த விருதை நான் பெற காரணமான தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு நன்றிகள் என்று பேசியுள்ளார்.

ரசிகர்கள் எமோஷனல்: அவரது இந்த பேச்சு குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், எமோஷனலாக ரஜினி பேசியதை வேகமாக பரவி வருகிறது. அவரது பேச்சை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











