twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருது மேடையிலும் பால்ய நண்பனை மறக்காத ரஜினி...நெகிழ்ச்சி பேச்சு

    |

    டெல்லி : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார்.

    விருதை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த், என்னை உருவாக்கிய பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருதை அர்ப்பணிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

    விருதுகளை குவித்த அசுரன் படம்... சிறந்த நடிகருக்கான தேசிய விருதுபெற்ற தனுஷ்! விருதுகளை குவித்த அசுரன் படம்... சிறந்த நடிகருக்கான தேசிய விருதுபெற்ற தனுஷ்!

    இந்த விருது வழங்கும் விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.

    உயரிய விருது

    உயரிய விருது

    இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.

    விருது வழங்கப்பட்டது

    விருது வழங்கப்பட்டது

    கடந்த ஏப்ரல் மாதம், தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. கரோனா காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. இன்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினி காந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விருதை வழங்கினார். இதில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    பாலசந்தருக்கு அர்ப்பணிக்கிறேன்

    பாலசந்தருக்கு அர்ப்பணிக்கிறேன்

    விருதை பெற்றுக் கொண்டபின் பேசிய ரஜினிகாந்த், என்னை உருவாக்கிய பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருதை அர்ப்பணிக்கிறேன் என்றார். மேலும், பால்கே விருதை பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார். என்னுடன் பணிபுரிந்த ஓட்டுனர் ராஜ்பகதூர், அவர்தான் எனது நடிப்புத்திறனை கண்டறிந்து ஊக்குவித்தார் என கூறினார். என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பேசினார் ரஜினிகாந்த்.

    தனுஷுக்கு விருது

    தனுஷுக்கு விருது

    இந்த விழாவில் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது, விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது, ஒத்த செருப்பு படத்துக்காக பார்த்திபனுக்கு சிறந்த நடுவர் தேர்வு விருது, கேடி (எ) கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, விஸ்வாசம் திரைப்படத்தில் இசையமைத்த டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது

    English summary
    Rajinikanth emotional speech after receiving the Dadasaheb Phalke Award, தாதா சாஹேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினி வருதை பாலச்சந்தருக்கு அர்ப்பணிப்பதாக உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X