ரஜினி பயந்தாங்கொள்ளி இல்லை.. 45 வருஷமா சூப்பர் ஸ்டார் ரசிகன்.. தவெக மேடையில் அதிர்ந்து போன ஆதவ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திமுக மிரட்டியதால் தான் அவர் அரசியலுக்கு வரவில்லை என்றும் விஜய் எந்த அச்சுறுத்தலுக்கு அடங்காமல் நெஞ்சுரத்துடன் அரசியல் செய்து வருகிறார் என ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் வாய் விட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் முதல் அரசியல் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க கடைசியாக ரஜினிகாந்த் நேற்று அறிக்கை விடுத்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டார்.

Rajinikanth Fan and TVK Cadre slams Aadhav Arjuna for his bad comments about Super Star

ஆதவ் அர்ஜுனா மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும் என்றும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக இருந்து தவெகவில் சேர்ந்தவன் நான் ரஜினி பற்றி யாரும் தப்பாக பேசக்கூடாது என விஜய்யின் தவெக கூட்டத்திலேயே ஃபயர் மோடில் பேசிய ரஜினி ரசிகரின் வீடியோ வைரலாகி வருகிறது.

அடங்கிப்போன ஆதவ்: விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த்துக்கு தைரியம் இல்லை என்றும் திமுக அவரை அரசியலுக்குள் வரக்கூடாது என எச்சரித்த நிலையில், அவர் அரசியலை விட்டு விலகியதாக பேசியது பஞ்சாயத்தைக் கிளப்பிய நிலையில், ரஜினிகாந்தின் அறிக்கைக்குப் பிறகு தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Rajinikanth Fan and TVK Cadre slams Aadhav Arjuna for his bad comments about Super Star

ரஜினி ரசிகர் ஆவேசம்: 45 வருடங்களாக ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை நடத்திக் கொண்டு இருந்தவன் நான். விஜய்யின் அரசியல் வருகையை பார்த்து அவர் கட்சியில் இணைந்திருக்கிறேன். ஆனால், அதற்காக என்னுடைய தலைவர் ரஜினியை யாரும் தப்பா பேசினால் அமைதியாக இருக்கமாட்டேன். ஆதவ் அர்ஜுனா எந்த உள்நோக்கத்துடன் பேசினார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், கொந்தளித்து கிடக்கும் ரஜினி ரசிகர்களுக்கு அவர் விளக்கம் தர வேண்டும். ரஜினிகாந்த் பயந்தாங்கொள்ளி இல்லை. அவருடைய வீரம், தைரியம், ஆளுமை என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவசரப்பட்டு இனிமேல் யாரும் அப்படி பேசக் கூடாது என ஆதவ் அர்ஜுனாவுக்கு மேடையிலேயே ரஜினி ரசிகர் அட்வைஸ் வழங்கியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைவரின் தலைவர்: எங்க தலைவர் விஜய்க்கே பிடித்த தலைவர் ரஜினிகாந்த் சார் தான் என்றும் திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வரும் நடிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரையும் எதிர்ப்பு பிரச்சாரங்கள் மூலம் திமுக அடக்க நினைப்பதையே சொல்ல முன் வந்தேன். என் பேச்சு உங்க மனசை புண்படுத்தியிருந்தா மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என ஆதவ் சரண்டர் ஆகிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X