Don't Miss!
- News
கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
- Sports
என்ன கொடும சார் இது.. சூர்யகுமாருக்கே தண்ணீர் காட்டிய சாண்ட்னர்.. அதுவும் பவர் ப்ளேவில் - ஆச்சரியம்!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சிவாஜி ரீ ரிலீஸுக்கே தியேட்டர் தெறிக்குதே.. 47 வருட ரஜினிஸம்.. ஃபேன் பாய் ஆன இயக்குநர்!
சென்னை: சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரஜினிகாந்தின் 47 வருட திரை வாழ்க்கையை முன்னிட்டு மீண்டும் சிவாஜி தி பாஸ் படம் திரையிடப்பட்டது.
புதிய படத்தை எப்படி ரசிகர்கள் கொண்டாடுவார்களோ அந்த அளவுக்கு ரஜினிகாந்தின் இளம் ரசிகர்கள் பட்டாளம் தியேட்டரை தெறிக்க விட்டுள்ளது.
அதிலும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநரின் ஃபேன் பாய் சம்பவம் வேற லெவல்.
குழந்தைகளுக்கு முத்தம் கொடுக்கறதுல இவ்ளோ இருக்கா.. நீயா நானா ஷோவில் மருத்துவர் ஷாலினி விளக்கம்!

சபாஷ் சரியான போட்டி
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே இப்படியொரு சரியான போட்டி காம்போவை எங்கேயும் பார்த்திருக்க மாட்டார்கள். கமல்ஹாசன் திரைக்கு சிறு வயதிலேயே வந்த நிலையில், கமல் 63ஐ கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் இளம் வயதில் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து தனது ஸ்டைலால் வசூல் சாம்ராட்டாக இப்பவும் அசத்தும் ரஜினிகாந்தின் 47 வருட ரஜினிஸத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிவாஜி ரீ ரிலிஸ்
சமீபத்தில் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்தது கொண்டாடப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சினிமா உலகுக்கு வந்து 47 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக மீண்டும் சிவாஜி தி பாஸ் திரைப்படம் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் திரையிடப்பட்டது.

செண்டை மேளம் முழங்க
செண்டை மேளம் எல்லாம் முழங்க வேற லெவலில் சிவாஜி தி பாஸ் படத்தின் ரீ ரிலீஸ் கொண்டாட்டத்தை ரஜினி ரசிகர்கள் களைகட்டினர். சிவாஜி படம் இப்போ வந்திருந்தால் கூட பல நூறு கோடி பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஜெயிலர் படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்க்ரீனே தெரியல
சிவாஜி படத்தின் ரீ- ரிலீஸை பார்க்க தியேட்டருக்குச் சென்ற ரசிகர்கள் யாருமே சீட்டில் உட்கார்ந்து படத்தை பார்க்கவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்க, திரைக்கு அருகே அவர்கள் போட்ட ஆட்டத்தில் பாதி ஸ்க்ரீன் முழுவதுமே மனித தலைகளாகவே தெரிகிறது. சமூக வலைதளங்களில் சிவாஜி படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடிய வீடியோக்களை ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video

தேசிங் பெரியசாமி
இயக்குநர் தேசிங் பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சிவாஜி தி பாஸ் ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் சேர்ந்துக் கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் ரஜினி படத்தை பார்த்து என்ஜாய் செய்துள்ளார். ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் - தேசிங் பெரியசாமி கூட்டணி அமைய வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.