நீங்க மட்டும் தீ தளபதின்னு பாட்டு போடலையா.. சூப்பர் ஸ்டாருடா பாடல் ட்ரோல்.. ரஜினி ரசிகர்கள் கேள்வி!
சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20ம் தேதி மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. விஜய்யின் லியோ மற்றும் கோட் படங்களுக்கு ஆடியோ லாஞ்ச் நடைபெறவே இல்லை. லியோ படத்துக்கு வெற்றி விழா நடைபெற்றது. கோட் படத்துக்கு வெற்றி விழா நடைபெறுமா? அல்லது மாநாடு மட்டும் தானா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
வேட்டையன் படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் வெளியாகி ஓணம் பண்டிகையில் வேறலெவலில் டிரெண்டாகி விட்டது. ஏகப்பட்ட பிரபலங்கள் ரீல்ஸ் போட்டு நடனமாடி வருகின்றனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியானாலே சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம் தான். பாடல்கள் காப்பி என்கிற சர்ச்சையும் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜெயிலர் படத்தில் டைகர் கா ஹுகும் பாடல் போட்டு தெறிக்கவிட்ட அனிருத் தற்போது வேட்டையன் படத்தின் செகண்ட் சிங்கிளில் "சூப்பர் ஸ்டாருடா.. ஹண்டர் வந்துட்டாருடா.. ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாருடா" என பாடல் போட்டுள்ளார்.
விஜய் ரசிகர்கள் கலாய்: ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதை ஒவ்வொரு படத்துக்கும் பாட்டா போட்டு சொல்லிட்டே இருப்பீங்களா, முடியல பாஸ் என ஏகப்பட்ட மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்களின் கிண்டல்களையும் கேலிகளையும் பார்த்து கடுப்பான ரஜினிகாந்த் ரசிகர்கள் அவர்களுக்கு சோஷியல் மீடியாவில் பதிலடி கொடுக்க சமூக வலைதள சண்டை சூடு பிடித்திருக்கிறது.
தளபதி தளபதி.. தீ தளபதி: சூப்பர் ஸ்டாருடா என வேட்டையன் படத்தில் பாடல் இடம்பெற்றால் உங்களுக்கு எங்க பாஸ் எரியுது என்றும் நீங்க மட்டும் "தளபதி தளபதி", "தீ தளபதி" என பில்டப் பாடல்களை போட்டுக் கொள்ளவில்லையா? அதே போலத்தானே இதுவும் என வச்சு செய்து வருகின்றனர்.

இளைய தளபதி வந்தது எப்படி?: ரஜினிகாந்தின் தளபதி படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் போலவே சினிமாவில் தானும் வளர வேண்டும் என நினைத்து தான் விஜய் இளைய தளபதி என்றும் சமீப காலமாக வயதான நிலையில், தளபதி என்றும் மாற்றிக் கொண்டார் என்றும் விஜய் படங்களிலேயே அவர் சூப்பர் ஸ்டார் ரெஃபரன்ஸ் வைத்து சூப்பர் ஸ்டாரை பிடிக்கும் என பேசிய காட்சிகளையும் ஷேர் செய்து விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தளபதி 69க்கு பிறகு: இந்த ரசிகர்கள் சண்டை எல்லாம் தளபதி 69 படம் வரைக்கும் தான் என்றும் அதன் பின்னர், அரசியல் ரீதியான சண்டையைத் தான் விஜய் ரசிகர்கள் போட போகின்றனர் என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்வீட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











