ரஜினிகாந்த் ரசிகர்கள் கோபத்துக்கு ஆளான பா. ரஞ்சித்.. ’தங்கலான்’ தலை தப்புமா?.. பொளக்கும் ரசிகர்கள்!

சென்னை: #நன்றிகெட்ட_ரஞ்சித் ஹாஷ்டேக்கை நேற்று முதல் ரஜினிகாந்த் ரசிகர்கள் போட்டு பா. ரஞ்சித்தை பொளந்து வருகின்றனர். விஜய் ரசிகர்களுடன் கிளாஷுக்கு வருவதற்கு பயந்துட்டீங்களா என சத்யன் ராமசாமி உள்ளிட்டோர் வீடியோ போட்டு கோட் படத்தின் ரிலீஸ் தேதியை வச்சு செய்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக பா. ரஞ்சித்துக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

பிகே ரோசி திரைப்பட விழாவில் தலித் சினிமா குறித்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலித் படங்கள் தரமான கிராஃப்ட்களாக உருவாகி வருகின்றன என்றும் நம்மை எதிர்த்து படம் பண்ணுபவர்கள் படங்கள் எல்லாம் பார்க்கவே சகிக்கல என பா. ரஞ்சித் பேசியிருந்தார்.

Rajinikanth fans angry over Pa Ranjith and they ready to roast Thangalaan movie too


கபாலி, காலா படத்தில் ரஜினிகாந்தை வைத்தே தரமான சம்பவம் பண்ணிட்டீங்களே பாஸ் என்கிற அளவுக்கு அவருடன் இருந்தவர் கலாய்க்க அதற்கு பா. ரஞ்சித் நக்கலாக சிரித்தது தான் தற்போது சோஷியல் மீடியாவில் ”நெருப்புடா, நெருங்குடா” என கொளுந்து விட்டு எரிகிறது.

கபாலி சீனே காப்பி: ரஜினிகாந்த் நடித்து வெளியான மனிதன் படத்தின் அறிமுக காட்சியில் வரும் ஜெயில் சீனை சுட்டுத்தான் கபாலி படத்தின் அறிமுக காட்சியையே பா. ரஞ்சித் எடுத்தார் என்றும் ரஜினிக்கு எதிராக பேசுவதும், நக்கல் பண்ணி சிரிப்பதும் சரியான நடைமுறை அல்ல என்றும் நன்றி கெட்ட ரஞ்சித் என ரஜினி ரசிகர்கள் பந்தாட ஆரம்பித்து விட்டனர்.


அப்பவே சமூக நீதி: இந்த படம் வந்தப்ப நீ பொறந்துருப்பியான்னே தெரியல என பா. ரஞ்சித்தை பங்கமாக கலாய்க்க ரஜினிகாந்தின் பழைய படத்தின் பாடல் காட்சி ஒன்றையும் ஷேர் செய்து ரஜினி ரசிகர்கள் ரவுண்டு கட்டியுள்ளனர். ஏற்கனவே பா. ரஞ்சித் வகையறா படங்களை மக்கள் பார்க்க மறுத்து வருகின்றனர். இதில், ரஜினிகாந்தை அவமதித்தால் என்ன நடக்கும் என்பதை காட்டப் போகிறோம் என கொதித்தெழுந்துள்ளனர்.

தங்கலான் தலை தப்புமா?: பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. தேர்தலுக்குப் பிறகு வெளியானாலும் அந்த படத்துக்கு பெரிய தலைவலியாக இயக்குநர் பா. ரஞ்சித்தே மாறிவிட்டாரே என ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய் படங்கள் வெளியாகும் போது பண்ண நெகட்டிவிட்டியை விட அதிகளவு பா. ரஞ்சித் படங்களுக்கு இனிமேல் ரஜினி ரசிகர்கள் களமிறங்கி வச்சு செய்வோம் என எச்சரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X