ஜெயிலர் படத்துக்கா நெகட்டிவ் விமர்சனம் சொல்ற.. ரணகள பூமியான தியேட்டர்.. இவ்ளோ வெறி ஆகாது!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்துக்கு அதிகப்படியான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், தளபதி விஜய் ரசிகர்கள் சிலர் ஜெயிலர் படத்தை மொத்தமாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தியேட்டரில் படம் எப்படி இருக்கு என கேட்டு மைக்கை நீட்டிய யூடியூப் சேனல்களிடம் ஜெயிலர் படத்துக்கு நெகட்டிவ் ரிவ்யூ சொன்ன விஜய் ரசிகர்களை ரஜினிகாந்த் ரசிகர்கள் தியேட்டரிலேயே விரட்டியடித்த பயங்கரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Rajinikanth fans beaten Vijay fans for giving negative reviews for Jailer movie

மாயாஜாலுக்கு வரும் ப்ளூ சட்டை மாறனை பொளக்கப் போவதாக ரசிகர்கள் டிவிட்டர் ஸ்பேஸ் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் புகார் அளித்த நிலையில், ஜெயிலர் படத்துக்கு யார் நெகட்டிவ் விமர்சனம் சொன்னாலும் அடிக்கும் மனநிலைக்கே ரஜினி ரசிகர்கள் சென்று விட்டது வேதனையளிக்கிறது.

ரசிகர்களை வெறியேற்றிய ரஜினி பேச்சு: இதற்கு முன் இல்லாத அளவுக்கு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையெல்லாம் சொல்லி தனது ரசிகர்களை வெறியேற்றிவிட்டார். இந்த முறை ரஜினிகாந்த் படம் மிஸ் ஆனால், ஹாட்ரிக் தோல்வியாக மாறிவிடும் என்பதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் படத்தை எப்படியாவது வெற்றியடைய செய்ய வேண்டும் என படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியதுமே ஒட்டுமொத்தமாக ஒரு வாரத்திற்கு பல தியேட்டர்களை டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர்.

Rajinikanth fans beaten Vijay fans for giving negative reviews for Jailer movie

வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை மாறன்: இன்னொரு பக்கம் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ரஜினிகாந்த் குறித்தும் ஜெயிலர் படம் குறித்தும் அவதூறு கருத்துக்களையும் நெகட்டிவிட்டிகளையும் பதிவிட்டு ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த ரஜினி ரசிகர்கள் சிலர் ட்விட்டர் ஸ்பேஸ் ஒன்றை நடத்தி படம் பார்க்க வருபவர்களில் யாராவது நெகட்டிவ் விமர்சனம் கொடுத்தால் கர்ச்சிப்பை கட்டிக்கிட்டு அடிங்க என்றே எல்லை மீறி சென்று விட்டனர்.

விஜய் ரசிகர்களை அடித்த ரஜினி ரசிகர்கள்: இந்நிலையில், வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் யூடியூபர்கள் பலரும் ஜெயிலர் படம் எப்படி இருக்கு என மைக்கை நீட்ட, படம் சுத்த மொக்கை, நெல்சன் சொதப்பிட்டாரு, ரஜினிகாந்தை பல இடங்களில் கலாய்த்து விட்டனர். இந்த படம் பார்ப்பதற்கு பதில் ஒரு கிலோ தக்காளி வாங்கிச் செல்லலாம் என விஜய் ரசிகர்கள் கிண்டலாக நெகட்டிவ் விமர்சனம் கொடுக்க அதை பார்த்து ஆத்திரமடைந்த சில ரஜினி ரசிகர்கள் தியேட்டரிலேயே விஜய் ரசிகர்களை அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.

Rajinikanth fans beaten Vijay fans for giving negative reviews for Jailer movie

கண்டிப்பாரா ரஜினி: நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் வன்முறையை விரும்ப மாட்டார் என்பது அனைவரும் தெரிந்தது தான். ரஜினி ரசிகர்கள் இப்படி கருத்துச் சுதந்திரமாக மற்றவர்கள் விமர்சிப்பதற்கெல்லாம் அடிக்கக் கூடாது என ரஜினி தரப்பில் இருந்து கண்டிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X