Jailer Memes: ஒரே சூரியன் ஒரே சூப்பர்ஸ்டார் தான்.. ஹேட்டர்களுக்கு பதிலடி.. டிரெண்டாகும் மீம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் சுமார் 400 கோடி வசூலை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனமே முதல் வார முடிவில் 375 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்து இருந்தது.

இரண்டாவது வாரமான வெள்ளிக்கிழமை இரவு முதல் சனி மற்றும் ஞாயிறு வீக்கெண்ட் ஷோக்கள் முழுவதும் திரையிட்ட பல திரையரங்குகளில் மீண்டும் ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன.

Rajinikanth fans befitting reply to haters with trending memes after Jailer success

ஜெயிலர் திரைப்படம் இரண்டாம் வார வசூல் முடிவில் 500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் ஜெயிலர் படத்துக்கு எதிராக வன்மத்தை கக்குபவர்கள் இவர்கள் தான் என ஒரு லிஸ்ட்டே போட்டு எடிட் செய்யப்பட்ட மீம் டிரெண்டாகி வருகிறது.

முத்துவேல் பாண்டியனின் முரட்டு சம்பவம்: விஜய்யை வைத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறாரே ஏ.ஆர். முருகதாஸ் என அவரை நம்பி தர்பார் படத்தைக் கொடுத்த ரஜினிக்கு அந்த படம் கை கொடுக்கவில்லை. அடுத்து அஜித்தை வைத்து விஸ்வாசம் ஹிட் கொடுத்த சிறுத்தை சிவாவை நம்பி அண்ணாத்த படத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கடைசியாக பீஸ்ட் படம் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், நெல்சனை மலையாக நம்பிய சூப்பர்ஸ்டாருக்கு முத்துவேல் பாண்டியனின் முரட்டு சம்பவத்தைக் கொடுக்க வசூல் வேட்டையனாக மாறிவிட்டார் ரஜினிகாந்த்.

விஜய்க்கு ஆதரவாக: நடிகர் விஜய் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரிட்டயர்ட் சூப்பர்ஸ்டார் என சில சினிமா பிரபலங்கள், விமர்சகர்கள், டிராக்கர்கள் என பலரும் கடந்த சில மாதங்களாகவே கொட்டிய அதிக வன்மத்தை எல்லாம் அடித்து நொறுக்கும் விதமாக ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி மூலம் சூப்பர்ஸ்டார் பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Rajinikanth fans befitting reply to haters with trending memes after Jailer success

வன்மவாதிகளுக்கு பதிலடி: டேய் நீங்க எத்தனை பேரு வந்து டிசைன் டிசைனா வன்மத்தை கொட்டினாலும், மக்கள் மனசுல என்னைக்குமே தலைவர் தான் டா ஒரே சூரியன்.. ஒரே சூப்பர்ஸ்டார் என படையப்பா படத்தின் காட்சியை வைத்து போட்டுள்ள மீம் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.

ஜெயிலர் படம் இரண்டாம் வார இறுதியில் தமிழ் சினிமாவில் புதிய வரலாற்று சாதனையை படைக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X