Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாழையிலையில் தடல்புடல் விருந்து.. ஜப்பானில் களைக்கட்டிய ரஜினிகாந்த் பிறந்தநாள்! #HBDThalaivar
சென்னை: ஜப்பானில் தமிழக ஸ்டைலில் தடல்புடல் விருந்துடன் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டரில் நேற்று முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பிறந்த நாள் ட்ரீட்டாக நேற்றே தலைவர் 168 படத்தின் பூஜை போடப்பட்டது.
|
ரசிகர்கள் கொண்டாட்டம்
இதனையே நேற்று டிவிட்டரில் ட்ரென்ட்டாக்கினர் ரஜினியின் ரசிகர்கள். அப்போதே ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்தும் தூள் பறந்தது. ரஜினியின் பிறந்தநாளை நேற்றே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.
தடல்புடல் விருந்து
ஜப்பானில் ரஜினியின் ரசிகர்கள் கோலாகலமாக அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டு ஸ்டைலில் தலை வாழையிலையில் தடல்புடல் விருந்து வைத்தனர்.
பட்டையை கிளப்பிய ஃபேன்ஸ்
சாதம் சாம்பார், ரசம், வடை, பாயாசம் அப்பளம் என அமர்க்களப்படுத்திவிட்டனர். கூடவே பாஷா படத்தையும் ஒட்டி பட்டையை கிளப்பினர். பாஷா படத்தின் ஆட்டோக்காரன் பாடலுக்கு ரஜினி ஸ்டைலில் செம ஆட்டம் போட்டனர்.
தனி அழகுதான்..
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், என்னதான்
தலைவருக்கு பிறந்தநாள் கொண்டாடினாலும்.. ஜப்பான் நாட்டில் தலைவரை கொண்டாடும் விதமே தனி அழகுதான்.. என தெரிவித்து வருகின்றனர்.