Coolie: மிஸ் யூ SPB Sir! அனிருத் வாய்ஸ்க்கும் தலைவர் ரியாக்‌ஷனுக்கும்.. முடியல.. எங்களை யார்தான் காப்பாத்துவா?

சென்னை: ரஜினிகாந்த்தின் 50 ஆண்டு திரை வாழ்க்கை நிறைவில் வெளியான கூலி படம் அவருக்கு மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்திற்கு மிகப்பெரிய வெற்றியை, வசூலை ஈட்டித் தரவேண்டும் என்ற எண்ணம், படக்குழுவை கடந்து, ரஜினி ரசிகர்களை கடந்து பரவலாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்ததுதான். ஆனால் ப்ரீ புக்கிங் ஆப்ஷன் மட்டும் இல்லையென்றால் படத்தை முதல் நாளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகியிருக்குமா என்பது கேள்விக்குறிதான். படத்தில் பல திரைக்கதை ஓட்டைகள் இருக்கிறது. அதை தனியாக எழுதலாம். ஆனால் ஒரு சினிமா ரசிகராக தலைவர் ரசிகராக படம் பார்த்த எனக்கு இருக்கும் வருத்தம் SPB சார் இல்லாததுதான்.

இன்றைக்கும் தீவிரமான ரஜினி ரசிகர்கள் தங்களது நாளை SPB சாரின் குரலோடு தான் தொடங்குகிறார்கள். நான் ஆட்டோகாரன், வந்தேன்டா பால்காரன், ஒருவன் ஒருவன் முதலாளி, பல்லேலக்கா, என இந்த பட்டியல் நீளும். SPB சார் இல்லாமல் மற்ற பாடகர்களின் குரலில் உருவான பல பாடல்களும் ப்ரியமானவைதான் என்றாலும், SPB சார் குரலில் உருவான பாடல்கள் ரொம்பவும் ஸ்பெஷல்.. இதயத்திற்கு நெருக்கமானதும் கூட.

மிஸ் யூ எஸ்.பி.பி சார்: தலைவர் போன்ற மாஸ் ஹீரோவுக்கு, அவரது 50 ஆண்டு திரை வாழ்க்கையை நிறைவு செய்யும் காலகட்டத்தில் வெளியான படம் கூலி. இந்த படத்தின் முதல் பாடல். தலைவருக்காகவே உருவாக்கப்பட்ட பாடல் சிக்குடு வைப். பாடலாக கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. பாடலின் லிரிக் வீடியோ பார்க்கும்போது கூட திரையில் பார்த்த போது ஏற்பட்ட ஒவ்வாமை ஏற்பட வில்லை. ஆனால் பெரிய திரையில் காதுகள் மட்டும் இல்லாமல் நெஞ்சில் கும் கும் என கேட்கும் நல்ல ஒலி அமைப்பு கொண்ட திரையரங்கில் அரங்கம் முழுவதும் இருந்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மத்தியில் அமர்ந்து பார்க்கும் போது ஏகப்பட்ட ஒவ்வாமை. இன்னும் சொல்லப்போனால் சகிக்கவில்லை.

Rajinikanth Fans Defenitly Miss Singer SPB Coolie Intro Song Chikitu Vibe Anirudh Gives Disappointment
Photo Credit:

ஒர்க்-அவுட் ஆகல: அனிருத் தலைவரின் தீவிர ரசிகராக, ஏன் பலரும் சொல்லிக் கொள்கிறார்களே அதுபோல பக்தராக கூட இருக்கலாம். ரஜினி மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறேன் என அந்த பாடலை பாட முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அது சுத்தமாக எடுபடவில்லை. அனிருத்தின் குரலுக்கும் தலைவரின் ரியாக்‌ஷனுக்கும் ஸ்கீரினை பார்க்க முடியாமல் தான் பார்க்க வேண்டியதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், மிஸ் யூ SPB Sir எனக் கத்தியே விட்டேன். கண்ணீர் விடாத குறைதான். யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற எண்ணமும் வந்துவிட்டது.

ஆல்டர்நேடிவ்: ஜெயிலரில் அலப்பறை கிளப்புறோம் பாடலுக்கு தலைவர் பாடுவது போல இருக்காது. அதனாலோ என்னவோ அந்த பாடல் திரையில் செம்மையாக ஒர்க் அவுட் ஆனது. அதேபோல் இந்த படத்திலும் அரங்கம் அதிர விசிலு பறக்கவே பாடலும் அலப்பறை கிளப்புறோம் அளவுக்கு இல்லை என்றாலும் ஓ.கே. ரகமாக இருந்தது. ஆனால் சிக்குடு வைப் பாடல் தலைவர் பாடுவது போல இருக்கிறது. அதனால்தான் என்னவோ அனிருத் குரலில் பெரிய திரையில் பார்க்கும் போதும் மேட்ச் ஆகவில்லை. சில விஷயங்களுக்கு ஆல்டர்நேடிவ் ஆப்ஷன் என்பதே இல்லை என்பதற்கு தலைவர் + SPB காம்போவைக் கூறலாம்.

Take a Poll

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X