Rajini: சூப்பர் ஸ்டாரை ஜனாதிபதியாக தேர்வு செய்க.. கோரிக்கை வைத்த ரஜினி ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்திய ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் சார்பாக, இந்திய ஜனாதிபதி ரஜினிகாந்த் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள மிக நீண்ட அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ள அவர்கள் கோரிக்கையை இந்த தொகுப்பில் காணலாம்.
அவர்கள் அறிக்கையில், " இந்திய ஜனாதிபதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தேர்வு செய்க! ரஜினிகாந்த் மக்கள் இயக்கம் கோரிக்கை, இந்திய ஜனாதிபதியாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்களை கட்சி பாகுபாடு இன்றி ஒருமித்த கருத்தோடு தேர்வு செய்ய வேண்டும் என இந்திய ஜனாதிபதி ரஜினிகாந்த் மக்கள் இயக்கம் கோரிக்கையை முன்வைக்கின்றது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து இந்திய ஜனாதிபதி ரஜினிகாந்த் மக்கள் இயக்கம் இந்திய அரசு தமிழக அரசு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் ஆகியோருக்கு பின்வரும் 8 முக்கிய கோரிக்கைகளை பெருமையுடன் முன்வைக்கிறது

சூப்பர் ஸ்டார் ர் ரஜினிகாந்த் ஒரு பழம்பெரும் நடிகர் மட்டுமல்ல உத்வேகம். எளிமை தைரியம் மற்றும் தலைமைத்துவத்தை பிரதிபலிக்கும் உலகளாவிய கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இருக்கிறார். இந்திய ஜனாதிபதி வேட்பாளராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முன்மொழிகிறது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோரிக்கைக்கு மத்திய அரசு, பாஜக, காங்கிரஸ். திமுக, மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிகள் உட்பட அனைத்து தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்
எமது இந்த கோரிக்கையை பரிசீலித்து அதை முன்னெடுத்துச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் இந்த இதயப்பூர்வமான வேண்டுகோளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கும்படி பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தலைவர் - 50. இந்திய சினிமாவில் ரஜினிகாந்தின் ஐம்பது ஆண்டுகால பாரம்பரிய கொண்டாட்டம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த வரலாற்று மைல்கல்லை கௌரவிக்கும் வகையில் தேசிய அளவில் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்வு நடக்க விரும்பும் முறை: பிரதமர் நரேந்திர மோடி, தலைமை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முன்னிலை மத்திய அமைச்சர் எல் முருகன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு (தகவல் மற்றும் ஒளிபரப்பு) நிகழ்ச்சி அமைப்பு தலைவராக கலாநிதி மாறன் செயல்படலாம். நிகழ்ச்சி அமைப்புச் செயலாளராக நடிகர் விஜய் பணியாற்றலாம். தமிழ்த் திரைப்படத் துறையும், தமிழ்நாடு அரசும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யலாம். இந்த பிரமாண்ட நிகழ்வை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த விரும்புகிறோம். இந்த கொண்டாட்டம் சர்வதேச அளவிலான நிகழ்வாக நடத்தப்பட வேண்டும் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஆஸ்கார் விருது பெற்றவர்கள் சர்வதேச திரைப்பட பிரபலங்கள் ஆகியோர் அழைக்கப்பட வேண்டும்.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் படம்: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் அன்பான ரசிகர் வேண்டுகோள் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க வேண்டும் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க வேண்டும். இந்திய சினிமாவில் இது ஒரு வரலாற்றுத் திரைப்படமாக மாறும். இருப்பினும், இது இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களின் படைப்பு சுதந்திரத்தை மதிக்கும் வகையில் ரசிகர்களின் விருப்பமான பரிந்துரையாக மட்டுமே முன்வைக்கின்றோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசிய,பிராந்திய அரசியல் கட்சி தலைவர்கள், அனைத்து மாநில முதலமைச்சர்கள், இந்திய மக்கள், திரை
நட்சத்திரங்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோரிடம் "இந்திய ஜனாதிபதி ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் கோரிக்கைகளுக்கு கட்சி பாகுபாடு இன்றி ஒருமித்த ஆதரவைக் கோருகிறோம் .
இந்த இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு அணுக இருக்க இருக்கும் நபர்கள் :நரேந்திர மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி, எடப்பாடி பழனிசாமி, மு.க ஸ்டாலின், சித்தராமையா, சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், சி.பி.ஆர் இந்திய துணை ஜனாதிபதி, எஸ்.பி முத்துராமன், கமல்ஹாசன், இளையராஜா, அண்ணாமலை, பாஜக, அமிதாப் பச்சன், ஷாருக்கான், சலமான் கான், ரன்வீர் சிங், ஐஸ்வர்யா ராய், முகேஷ் அம்பானி, தோனி.

அரசியல் கட்சிப் பாகுபாடு இல்லை: இந்த இயக்கம் அரசியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது எந்த ஒரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளராக இல்லாமல் இந்தியாவின் உணர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் வேட்பாளராக ரஜினிகாந்தை இந்திய ஜனாதிபதியாக ஆதரிக்குமாறு இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்
ரஜினிகாந்த் ஒரு சக்திவாய்ந்த ஜனாதிபதி: குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் மரியாதைக்குரிய தலைமையைப் போலவே, ரஜினிகாந்த் இந்தியாவின் வலிமையான மற்றும் உத்வேகம் தரும் ஜனாதிபதியாக இருப்பார். தேசிய நலனில் எப்போதும் அக்கறை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஞானம், ஆன்மீகம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவை தேசத்தை ஊக்குவிப்பதோடு இந்தியாவை அதிக நேர்மறை, ஒற்றுமை மற்றும் செழிப்புக்கு வழிநடத்தும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











