Jailer - சிறை கைதிகள் போல் உடை அணிந்துவந்த ரசிகர்கள்.. ஜெயிலர் அலப்பறை ஸ்டார்ட்

மதுரை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தை பார்ப்பதற்கு மதுரையில் ரஜினி ரசிகர்கள் சிறை கைதிகள் போல் உடை அணிந்து வந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் இன்று வெளியாகியிருக்கிறது. கடைசியாக நடித்த அண்ணாத்த தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த அவரது ரசிகர்கள் நெல்சன் திலீப்குமாருடன் ரஜினி இணைந்திருக்கும் ஜெயிலர் படத்தை ரொம்பவே நம்பிக்கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் ஜெயிலர் வெற்றி அதிகம் அவசியப்பட்டது அவர்களுக்கு.

Rajinikanth fans in Madurai dressed up like prison inmates to watch Jailer

ஜெயிலர் ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் ஜெயிலர் வருகையை திருவிழா போல் கொண்டாடிவருகின்றனர். கட் அவுட்டுகள், பேனர்கள் என தியேட்டரை தெறிக்கவிட்டனர்.9 மணிக்குத்தான் முதல் காட்சி என்றாலும் காலை சீக்கிரமாகவே திரையரங்குகளுக்கு சென்று பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது என ரகளையை கிளப்பினர் ரசிகர்கள்.

எப்படி இருக்கிறது படம்: வெளிநாட்டில் அதிகாலை காட்சி பார்த்தவர்கள் படத்துக்கு பாஸிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். இருந்தாலும் உள்நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் ரிசல்ட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே இருந்தது. தற்போது முதல் காட்சி முடிந்துவிட்டது. அதனையடுத்து படம் பார்த்தவர்கள் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தங்களது விமர்சனத்தை கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

பாசிட்டிவ் விமர்சனம்: படத்தின் முதல் பாதி ஸ்லோவாக ஆரம்பித்தாலும் போகப்போக படம் பிக்கப் ஆகிவிடுகிறது; குறிப்பாக யோகிபாபு ரஜினி காம்போ க்ளிக் ஆகியிருக்கிறது. இடைவேளை காட்சி மாஸ் என கூறும் அவர்கள்; இரண்டாம் பாதி முதல் பாதியை அருமையாக இருக்கிறது.முக்கியமாக வில்லன் விஷயத்தில் நெல்சன் வைத்திருக்கும் ட்விஸ்ட் ரசிக்கும்படி இருக்கிறது. மொத்தத்தில் ஜெயிலர் படம் மெகா ஹிட் என்பது உறுதி. குறிப்பாக நெல்சன் திலீப்குமாரும், ரஜினிகாந்த்தும் கம்பேக் கொடுத்துவிட்டார்கள் என கூறுகின்றனர். அதேசமயம் சில நெகட்டிவ் விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன. கைதிகள் போல் உடை அணிந்துவந்த

Rajinikanth fans in Madurai dressed up like prison inmates to watch Jailer

அலப்பறையை கிளப்பிய ரசிகர்கள்: ஒருபக்கம் பாஸிட்டிவ் விமர்சனம் வருவதால் படக்குழுவும், ரஜினி ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். அதேபோல் மறுபக்கம் ரசிகர்கள் அலப்பறையை கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ரஜினி படம் வந்தாலே அந்தப் படத்தில் ரஜினியின் கெட்டப் என்னவோ அதுபோல் உடை அணிந்து ஃபேன்ஸ் வருவது வழக்கம்.

இந்த முறை படத்தின் பெயர் ஜெயிலர் என்பதாலும், ரஜினி ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாலும் மதுரையை சேர்ந்த ரசிகர்கள் சிறை கைதிகள் போல் உடையணிந்து முதல்நாள் முடல் காட்சி பார்க்க வந்தார். அதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X