For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோமாளி ஜெயம் ரவியுடன் மல்லுக் கட்டும் ரஜினி ரசிகர்கள் - ஓசி வௌம்பரம்தான்

By R VINOTH
|

சென்னை: ஜெயம் ரவி நடிச்சிருக்கிற கோமாளி படத்தோட ட்ரெய்லர பாத்து காண்டான ரஜனி ரசிகர்கள் எல்லாம் ஒன்னா சேந்து ஜெயம் ரவியையும், அந்தப் படத்தோட புரடயூசர், டைரக்ரன்னு எல்லாருக்கும் பயங்கமா எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க.

அடங்க மறு அப்பிடிங்குற படத்துக்கு அப்புறமா நம்ம ஜெயம் ரவியும் புதுமுக டைரக்டரான பிரதீப் ரங்கனாதனும் ஒண்ணு சேந்துருக்குற படந்தான் இந்த கோமாளி. இந்த படம் ஜெயம் ரவி நடிக்கிற 24ஆவது படம்.

இந்தப் படத்துல ஜெயம் ரவிக்கு ஜோடியா ஸ்வீட் ஸ்டால் நடிகையான காஜல் அகர்வால் நடிக்கிறாரு. கூடவே இன்னோரு ஜோடியா சம்யுக்தா ஹெக்டேங்குற பொண்ணு நடிக்குறாங்க. காமெடியில கலக்குறதுக்கு நம்ம யோகி பாபு இருக்குறாரு. அப்புறம் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரும் நடிக்குறாரு.

rajinikanth fans oppose komali trailer

கோமாளி படம் வர்ற ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திர தினத்தின்னிக்கு ரலீஸாகுது. இந்த கோமாளி படத்தோட அஃபீசியல் ட்ரெய்லர் சமீபத்தில ரிலீஸ் ஆனது. இந்தப் படத்துல ஹீரோ ஜெயம் ரவி ரொம்ப வளந்த தாடி மீசை எல்லாம் வச்சிக்கிட்டு கொஞ்சம் கரடு மொரடா பாக்குறதுக்கு பயங்கர பரிதாபமா ஹாஸ்பிடல் பெட்ல கண் முழிச்சி பாக்குறாரு.

தன்னோட ஃபேஸ பாத்து அதிர்ச்சியாகுற ஜெயம் ரவி கிட்ட யோகி பாபு, யப்பா நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமா ஸ்டேஜுல இருந்தப்பான்னு சொல்லறத கேட்டு ஜெயம் ரவி அப்பிடியே ஷாக்காயிடறாரு.

நம்ம 16 வருஷமா கோமா ஸ்டேஜ்லயா இருந்தோம்கிறதையே நம்பாத ஜெயம் ரவிக்கு யோகி பாபு, ஒரு வீடியோவ போட்டு காட்டுறாரு. அதுல சூப்பர் ஸ்டார் ரஜினி, நான் அரசியலுக்கு வருவது உறுதி அப்பிடின்னு சொல்றாரு. அதப்பாத்து குஷியாகுற ஜெயம் ரவி, கொஞ்சம் பதட்டதோடவே ஏய்ய்ய, யார ஏமாத்தப் பாக்குறீங்க, இப்ப நடக்குறது 96ஆவது வருஷந்தான், அப்பிடிங்கறதோட அந்த ட்ரெய்லர் முடியுது.

இப்போ பிரச்சனையே, இந்த சீன் தான், இந்த சீன பாத்துட்டு ரஜினி ரசிகர்கள்லாம் கொந்தளிச்சி போயிருக்காங்க. ரஜினிக்கு சப்போர்ட் பண்ணி இதுக்காக #நாளைய தமிழகம் ரஜினி அப்பின்னு ஒரு ஹேஷ்டேக்கையும் ரெடி பண்ணி இந்தியா ஃபுல்லா ட்ரெண்டாக்கிட்டாங்க.

சில ரஜினி ரசிகர்கள், எங்க தலைவர் எப்ப அப்பிடி சொன்னாரு, அதுக்கு என்ன எவிடென்ஸ் வச்சிருக்கீங்க, வச்சிருந்தா அத ப்ரூஃப் பண்ணுங்கன்னு வேற சொல்லியிருக்காய்ங்க.

இந்த சீன் வச்சதுக்கு என்ன ரீசன்னு படத்தோட ஃபங்ஷன்ல சொன்ன இந்தப் படத்தோட டைரக்டர் பிரதீப் ரங்கநாதன், நான் வந்து பயங்கர ரஜினி ரசிகன். அவரோட லிங்கா படம் ரிலீசானப்போ அவரோட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் எல்லாம் பண்ணிருக்கேன். அவரு சீக்கிரமா பாலிடிக்ஸுக்கு வரணும்கிறதுக்காகவே இந்த சீன டெவலப் பண்ணி எடுத்திருக்கேன்

குறிப்பா இந்த படம் 90ஸ் கிட்ஸுங்களுக்கு ரொம்ப பிடிக்கும், படம் பாக்குறவங்களுக்கு ஒரு நல்ல படம் பாத்தி திருப்தி இருக்கும்னு சொல்லி இருக்காரு.

கோமாளி படத்தோட புரடுயூசர் ஐசரி கணேஷ், நானும் ரஜினி சார் கூட நடிச்சிருக்கேன். சப்போஸ் அவரு எங்கிட்டே கேட்டாக்கூட நான் அவர்கிட்ட, அண்ணே நீங்க சீக்கிரம் பாலிடிக்ஸுக்கு வரணும்கிறதுக்காகவே அந்த ஸீன வச்சிருக்கோம்னு சொல்லுவேன் அப்படிங்கிறார்.

எப்படியோ கோமாளி படத்துக்கு பைசா செலவு இல்லாமயே, ரஜினி ரசிகர்களால ஒரு நல்ல வௌம்பரம் கெடச்சிடிச்சி. அது வரைக்கும் சந்தோசந்தான்.

English summary
Rajinikanth's fans, who were enraged by the trailer of yesterday's clown movie, have joined the protest against Jayam Ravi, director and producer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more