’கோட்’ படத்தை காலி பண்ணனும்.. ஸ்கெட்ச் போடும் ரஜினி ஃபேன்ஸ்?.. பகீர் கிளப்பும் ’ட்விட்டர் ஸ்பேஸ்’!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை தோல்விப் படமாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ட்விட்டர் ஸ்பேஸ் போட்டு சில ரஜினிகாந்த் ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் ட்விட்டர் ஐடிக்கள் சதி திட்டம் தீட்டும் ட்விட்டர் ஸ்பேஸ் ஆடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஒரு படம் வெளியாகி அந்த படம் சிறப்பாக இல்லை என்றால் அதை ஹேட்டர்கள் ட்ரோல் செய்யும் காலம் எல்லாம் மலையேறி போய் விட்டன. தற்போது படம் வருவதற்கு முன்பாக ஒரு படத்தை எப்படி காலி பண்ண வேண்டும் என யோசிக்கும் அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் வன்மம் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

GOAT Vijay Rajinikanth

விஜய்யின் லியோ படம் வெளியான போது கூட அதிகளவில் நெகட்டிவிட்டியை பரப்பியே அந்த படத்தை மீசை ராஜேந்தர் உள்ளிட்ட பலர் வெளிப்படையாகவே எதிர்ப்பு பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது என விஜய் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

போட்டா போட்டி: பாக்ஸ் ஆபிஸில் யாரு நம்பர் ஒன் நடிகர் என்கிற போட்டா போட்டி விஜய் - அஜித் ரசிகர்களை தாண்டி தற்போது விஜய் - ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எழுந்திருப்பது தான் இந்தளவுக்கு மோசமாக தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் டாப் ஹீரோக்களின் படங்களை காலி பண்ண சோஷியல் மீடியாவில் சிலர் தீயாக வேலை செய்து வருகின்றனர் என்கிற உண்மையை வெளிச்சம் போட்டு இந்த ட்விட்டர் ஸ்பேஸ் காட்டுகிறது.

கோட் சஸ்பென்ஸை பிரேக் பண்ணனும்: கோட் படத்தின் டிரெய்லரில் நிச்சயம் விஜயகாந்த் மற்றும் சிவகார்த்திகேயனை ரிவீல் செய்ய மாட்டாங்க. ஆனால், சில ஏஐ காட்சிகளை ரிவீல் பண்ணுவாங்க, படம் கேம் கதையாக இருந்தால் 'ரா ஒன்' படத்தை போட்டு அடிக்க வேண்டும். எந்த இடத்தில் ஒரு சின்ன கேப் கிடைத்தாலும் படத்தை பங்கமாக கலாய்த்து படம் வெளியாவதற்கு முன்னதாகவே கோட் படத்தின் அனைத்து சஸ்பென்ஸையும் பிரேக் பண்ணி படத்தை ஓடவிடாமல் செய்ய வேண்டும் என பேசிக் கொள்கின்றனர்.

GOAT Vijay Rajinikanth

ஆபத்தான விஷயம்: இளைஞர்கள் மத்தியில் நெகட்டிவிட்டியை பரப்ப வேண்டாம் என நடிகர்கள் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் வரும் போது ஒற்றுமையே இல்லாமல் பலரும் அந்த படங்களை ட்ரோல் செய்து காலி செய்ய காரணமே இதே போல ஒவ்வொரு டாப் ஹீரோக்களின் ரசிகர்களும் திட்டம் தீட்டி ட்ரோல் செய்வது தான் காரணம் என்று கூறுகின்றனர். விஜய் ரசிகர்கள் ரஜினிக்கும், ரஜினி ரசிகர்கள் விஜய்க்கும் இப்படி செய்வதால், இழப்பு தேவையில்லாமல் பணம் போட்டு படத்தை எடுத்த தயாரிப்பாளரின் தலையில் தான் வந்து விடிகிறது என்கின்றனர்.

அதிகரிக்கும் வன்மம்: சினிமா படங்களை பார்த்து பொழுது போக்கிய காலம் எல்லாம் போய் தற்போது சினிமா படங்களுக்காக சண்டை போடுவது, சதி திட்டம் தீட்டுவது என்கிற ரேஞ்சுக்கு இளைஞர்களின் மனங்களில் இந்த முன்னணி ஹீரோக்களின் படங்கள் வன்மத்தை விளைவித்து விட்டதே என நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X