Coolie: 1000 கோடி வசூலுக்கு வேண்டி 1000 கிடா வெட்ட ரஜினி ரசிகர்கள் திட்டம்? இந்த ப்ளான் எப்போ?

சென்னை: தமிழ் திரையுலகத்துக்குமே இப்போது மழை அடித்து ஓய்ந்தது போல உள்ளது. கூலி படம் வரும் 14ஆம் தேதிதான் ரிலீஸ் என்றாலும் நேற்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவே அப்படியான எண்ணத்தைக் கொடுத்து விட்டது. படத்தின் டிரைலரும் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கூலி படம் பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 1000 கோடிகளை வசூல் செய்ய, ரஜினிகாந்த் ரசிகர்கள் 1000 கிடா வெட்டி அன்னதான விருந்து போட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் உலா வருகிறது.

ரஜினிகாந்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50வது ஆண்டில் வெளியாகும் படம் தான் கூலி. கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பல்வேறு திரைத்துறையில் இருந்து பல ஸ்டார்கள் நடித்துள்ளார்கள்.

Rajinikanth Fans Plans To Sacrifice 1000 goats for Coolie Will Be 1000 Crore Collection Hit

தெலுங்கு திரைத்துறையில் இருந்து நாகார்ஜுனா, கன்னட திரைத்துறையில் இருந்து உபேந்திரா, மலையாள திரைத்துறையில் இருந்து சௌபின் சாகிர், இந்தி திரையுலகில் இருந்து அமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தென்னிந்திய சினிமாவில் கன்னட சினிமா, தெலுங்கு சினிமா உலகத்தினர் ஒரே படத்தின் வசூல் அயிரம் கோடி ரூபாய்க்கு மேல் குவித்தது.

1000 கோடிகள்: ஆனால் தமிழ் திரையுலகில் இதுவரை எந்த படமும் ரூபாய் ஆயிரம் கோடிகள் வசூலை எட்டவில்லை. இப்படி இருக்கும்போது கூலி படம் ரூபாய் ஆயிரம் கோடி வசூல் குவிக்கும் என்ற பேச்சு திரைத்துறையில் அடிபடுகிறது. குறிப்பாக, படம் அனைத்து திரையுலகிலும் நல்ல வசூலைக் குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் போது படத்தின் வசூல் ரூபாய் ஆயிரம் கோடிகள் எட்டும் என்ற பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

Rajinikanth Fans Plans To Sacrifice 1000 goats for Coolie Will Be 1000 Crore Collection Hit

1000 கிடாய்கள்: இப்படியான நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக சுமார் 1000 கிடாய்கள் வெட்டி, பொதுமக்களுக்கு அன்னதான அசைவ விருந்து வைக்க முடிவெடுத்துள்ளார்கள் என கூறப்படுகிறது. இந்த தகவலைக் கேட்ட திரைத்துறையினர், ரஜினி ரசிகர்கள் செய்தாலும் செய்வார்கள். மொத்தத்தில் ஆயிரம் கோடிகளை கூலி படம் வசூல் செய்தால், படத்தின் வெற்றியைக் கடந்து திரைத்துறையில் தனது 50வது ஆண்டைக் கொண்டாடும் ரஜினிக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X