ரஜினி எங்கே கோட்டைவிட்டாரோ அதை விஜய் புடிச்சிட்டாரு.. சூப்பர் ஸ்டார் ரசிகரே இப்படி பாராட்டுறாரே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியாவது அரசியலுக்கு வந்து திமுக, அதிமுகவுக்கு எதிராக புதிய அரசியலை செய்து மக்களுக்கு பல நன்மைகள் செய்வார் என ரஜினிகாந்தின் ரசிகர்களாகவும் தொண்டர்களாகவும் காத்துக் கொண்டிருந்த பலர் இப்பவும் இல்லை இனி எப்பவும் இல்லை என கடைசியாக ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் கூட செய்ய மாட்டேன் என முடிவெடுத்தது பலரையும் நிஜமாகவே பாதித்து விட்டது.

கடைசி வரை ரசிகர்களுக்காக சினிமாவிலேயே சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டலாம் என நினைத்த ரஜினிகாந்த் ஜெயிலர், வேட்டையன், கூலி என அடுத்தடுத்து சினிமாவில் மீண்டும் தனது உச்சத்தை தொட்டு சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறார்.

Vijay Rajinikanth


ஆனால், 50 வயதில் சினிமாவே வேண்டாம் இனிமேல் மக்கள் பணி செய்யலாம். எத்தனை பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, யாரெல்லாம் எப்படி கிண்டல் செய்தாலும் சமாளித்து விடலாம் என களமிறங்கியுள்ள விஜய்யை சில ரஜினி ரசிகர்கள் அந்தவொரு தைரியத்துக்காகவே பாராட்டி வருகின்றனர்.

தவெக தலைவர்: தளபதி விஜய் இனிமேல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறியுள்ளார். கடந்த ஆண்டு எந்தளவுக்கு கல்வி விருது விழாவை மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களுடன் ஜாலியாக நடத்தினாரோ அதே உற்சாகத்துடன் இந்த ஆண்டும் அந்த விழாவை நடத்தியுள்ளார். பல மாணவ மாணவிகள் குடும்பத்துடன் வந்து விஜய் அண்ணாவை ஆசையை தொட்டுப் பார்த்து அவருடன் ஹார்ட்டின் போல கை வைத்து போஸ் கொடுத்து, சால்வையை பெற்றோருக்கு போடுறீங்களா அண்ணா ப்ளீஸ் எனக் கேட்க அவரும் மாணவர்களின் ஆசையை நிறைவேற்ற சில தந்தைகள் மாஸ்டர் போஸ் கொடுத்து எல்லாம் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றினர்.

செம க்யூட் விஜய்: நடிகர் விஜய்யின் இந்த லுக் தான் நல்லா இருக்கு என்றும் அரசியல் மேடைகளில் இதையே அவர் மெயின்டெயின் பண்ண வேண்டும் என்றும் தளபதி ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஜோசப் விஜய் என சர்ச்சை கிளப்பி பிரிவினைவாதத்தை உண்டு செய்தாலும், அன்புடன் தாய்மார்கள் பொட்டு வைத்து விட்டால் அழகாக அதை வைத்துக் கொண்டு மேடையேறிய அழகே செம க்யூட் என ரசிகர்கள் திருஷ்டி சுற்றிப் போட்டு வருகின்றனர்.

கோட்டை விட்ட ரஜினி: ”விஜய்யின் அரசியல் நகர்வும் மக்கள் தொடர்பும் வியக்க வைக்கிறது... ரஜினி எங்கே கோட்டைவிட்டாரோ அதை விஜய் தவிர்த்து மக்களிடம் இன்னும் நெருங்குகிறார்.. அரசியலுக்கு இந்த குணம் மிக அவசியம்..வெகுமக்கள் எண்ணவோட்டத்தின் பக்கம் நிற்பது.. நிச்சயம் விஜய் தமிழ்நாடு முதல்வராவார்..Mark My words” என பதிவிட்டு பாராட்டியுள்ளார். அவரது ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.


எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா விஜய்?: மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்கள் வேண்டும் என்று தான் மக்கள் ஒவ்வொரு முறையும் மாற்றத்தை சிந்தித்து வாக்கு அளித்து வருகின்றனர். ஆனால், அதிகாரம் கிடைத்த உடன் மக்கள் நிம்மதி அடையும் அளவுக்கு யாருமே ஆட்சி செய்வது இல்லை என்பது தான் பொது மக்களின் கருத்தாக உள்ளது. அதனால் தான் அடுத்து புதிதாக விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்தாலும் அவராவது மாற்றம் கொண்டு வருவாரா என எதிர்பார்க்கின்றனர். இந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை விஜய் பூர்த்தி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Read more about: vijay rajinikanth விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X