twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்போ அந்த மூக்குத்தி அம்மன் தங்கச்சி கேரக்டர்.. ஆர்ஜே பாலாஜியை பந்தாடும் ரஜினி ரசிகர்கள்!

    |

    சென்னை: ஆண்களும் பெண்களும் சமம் என்கிற டாப்பிக்கில் பேசிய ஆர்ஜே பாலாஜி நடிகர் ரஜினிகாந்த் நடித்த மன்னன் மற்றும் படையப்பா படத்தில் பெண்களை தவறாக சித்தரித்து விட்டார்கள் என சமீபத்தில் கல்லூரி ஒன்றில் நடந்த வீட்ல விசேஷம் பட விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    ஆர்ஜே பாலாஜி நடித்த நானும் ரவுடி தான், எல்கேஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் பெண் கதாபாத்திரங்களை எப்படி சித்தரித்துள்ளார்கள் என ஒரு லிஸ்ட்டே போட்டு ரஜினி ரசிகர்கள் ஆர்ஜே பாலாஜியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து அவரை பந்தாடி வருகின்றனர்.

    சமீப காலமாக சினிமா விழாக்களில் சர்ச்சையாக பேசினால் தான் பரபரப்பு கிடைக்கிறது என்பதால் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி அப்படி பேசி வருகிறார் என அவருக்கு எதிராக ஏகப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

    பொன்னியின் வீட்டில் கல்லெறியும் எதிரிகள்... ஆதரவாக களமிறங்கும் வாணி -ராணி... ராதிகாவின் புதிய தொடர்!பொன்னியின் வீட்டில் கல்லெறியும் எதிரிகள்... ஆதரவாக களமிறங்கும் வாணி -ராணி... ராதிகாவின் புதிய தொடர்!

    ரஜினிகாந்தை சீண்டி

    ரஜினிகாந்தை சீண்டி

    எல்கேஜி, மூக்குத்தி அம்மன் என இரு படங்களில் ஹீரோவாக நடித்து இப்போதுதான் தமிழ் சினிமாவில் வளர ஆரம்பித்துள்ள ஆர்ஜே பாலாஜி அதற்குள் தனது படத்தின் புரமோஷனுக்காக ரஜினிகாந்தை சீண்டி பேசியிருப்பது ரஜினி ரசிகர்களை கடுங் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது. மன்னன் மற்றும் படையப்பா படத்தில் பெண்களை தப்பாக காட்டியிருப்பார்கள் என ஆர்ஜே பாலாஜி பேசியது அவருக்கே ஆப்பாக அமைந்துள்ளது.

    திமிரு காட்டாதடி

    திமிரு காட்டாதடி

    ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி படத்தில் பிரியா ஆனந்த் கதாபாத்திரம் மட்டும் எப்படி சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. திமிரு காட்டாதடி என்கிற பாடலை ஏன் வைத்தீர்கள் என கேள்விகளை எழுப்பி ரஜினி ரசிகர்கள் விளாசி வருகின்றனர். உனக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என வித விதமாக ட்ரோல் செய்து துவம்சம் செய்து வருகின்றனர்.

    மூக்குத்தி அம்மன் படத்தில்

    மூக்குத்தி அம்மன் படத்தில்

    ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் 3 தங்கைகளை வளர்க்க கஷ்டப்படும் அண்ணனாக காட்டியது மட்டுமின்றி, 3வது பெண்ணுக்கு வேண்டாமிருதம் என்றே பெயர் சூட்டியிருப்பார். மேலும், மூத்த தங்கச்சி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்ப்பவரை அப்பாவியாகவும், இளைய தங்கச்சி படித்து விட்டு ஏர்ஹோஸ்ட்டஸ் வேலைக்கு செல்பவரை திமிர் பிடித்தவராகவும் ஏன் காட்டினீர்கள் ஆர்ஜே பாலாஜி என ரஜினி ரசிகர்கள் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.

    மன்னன், படையப்பா

    மன்னன், படையப்பா

    பெண்களை வெறும் டூயட்டுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த சூழலில் ஹீரோவுக்கு சமமாகவும், ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தையே அடிக்கும் காட்சியை வைத்து மன்னன் படத்தில் பி. வாசு செம ஸ்கோர் செய்திருப்பார். அதே போல, ரம்யா கிருஷ்ணனின் நீலம்பரி கதாபாத்திரத்தை கொடுத்து கே.எஸ். ரவிக்குமார் படையப்பா படத்தில் மிரட்டி இருப்பார். பெண்களை இதற்கு மேல் இழிவாக காட்டும் எத்தனையோ மற்ற நடிகர்கள் படங்கள் இருக்க ரஜினிகாந்தை தாக்கி பேசியது ஏன் என ரஜினி ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    சந்திரமுகி

    சந்திரமுகி

    பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வள்ளி என்கிற டைட்டிலில் படம் தயாரித்தது ரஜினி தான். சந்திரமுகி படத்திலும் சரவணன் என டைட்டில் வைக்கவில்லை. கொஞ்ச சீன்களில் அவர் படத்திலே இருக்க மாட்டார். அப்படி மற்ற நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த ரஜினிகாந்தின் படங்களை பற்றி பேசுவதற்கு முன்பாக சற்று யோசனை செய்யுங்கள் பாலாஜி என ரசிகர்கள் பந்தாடி வருகின்றனர்.

    சம்பளம் சமமா?

    சம்பளம் சமமா?

    ஆர்ஜே பாலாஜி நடிக்கும் படங்களில் அவருக்கு கொடுக்கப்படும் அதே சம்பளத்தை அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைக்கு முதலில் கொடுப்பார்களா கேட்டுச் சொல்லுங்கள், பிறகு ரஜினிகாந்துக்கு பாடம் எடுக்கலாம் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

    English summary
    Rajinikanth fans roasted RJ Balaji for his recent speech at Veetla Visesham pre release function. He pointed out Mannan and Padayappa scenes for his speech turns backfire to him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X