ரஜினிகாந்த் மகளை திடீரென திட்டும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.. அடக்கொடுமையே.. இப்படியொரு காரணமா?
சென்னை: ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்தையே திடீரென சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் திட்ட தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என 2 மகள்கள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் படத்தை உருவாக்கி மிகப்பெரிய சரிவை சந்தித்தார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கிய நிலையிலும் வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், அவர் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து உருவாக்கியுள்ள 'வித் லவ்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது திடீரென அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய ரஜினிகாந்த் ரசிகர்கள் திட்டத் தொடங்கியது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சந்தோஷத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த்
அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'வித் லவ்' திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி மற்றும் செலிபிரிட்டி ஷோக்களை வெளியிட்டு படத்தை புரமோட் செய்து வருகிறார். படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். போதாக்குறையாக அப்பா ரஜினிகாந்தையும் சத்யம் தியேட்டருக்கு வரவழைத்து படத்தை பார்க்க வைத்துள்ளார்.
திட்டும் ரஜினி ரசிகர்கள்
ஆனால், திடீரென சில ரஜினிகாந்த் ரசிகர்கள் செளந்தர்யா ரஜினிகாந்தை சோஷியல் மீடியாவில் கண்டபடி திட்ட ஆரம்பித்துள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இயக்குநர் ரத்னகுமார் படத்தைப் பார்த்துவிட்டு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து செளந்தர்யா ரஜினிகாந்த் போட்ட ட்வீட் தான் என்கின்றனர்.
கழுகுக்கு பசிச்சா?
ஜெயிலர் பட விழாவில் காக்கா கதையை ரஜினி சொன்னது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லியோ படத்தின் வெற்றி விழாவில் "கழுகுக்கு பசிச்சா கீழ இறங்கித்தான் ஆகணூம்" என மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் பேசியது ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
ரஜினிக்கு எதிராக
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிராக ரத்னகுமார் பேசியதால் தான் அவர் கூலி படத்திலேயே பணியாற்றவில்லை என்கிற பேச்சுக்களும் அடிபட்டன. இந்நிலையில், தற்போது வித் லவ் படத்தை பாராட்டிய ரத்னகுமாருக்கு "தேங்க்யூ சோ மச்ங்க" என பதிவிட்ட ட்வீட் தான் பிரச்னையாக மாறியுள்ளது. படையப்பா ரீ ரிலீஸுக்காக ரஜினிகாந்தை வீடியோ போட சொல்லி டார்ச்சர் செய்தார் என்றும் தற்போது தியேட்டருக்கு எல்லாம் அழைத்து தனது படத்தின் புரமோஷனுக்காக தலைவரை கஷ்டப்படுத்துகிறார் என்றும் ரஜினி ரசிகர்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். ஆனால், நன்றி சொன்னதற்கு எல்லாம் செளந்தர்யா ரஜினிகாந்தை திட்டுவது சரியல்ல என்றே ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











