ஸ்டைல் நாயகன் ரஜினிகாந்த் … வைரலாகும் புகைப்படம் !
சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் , குஷ்பு, மீனா , ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் குடும்ப பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர்கள், ரஜினி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு #Annaatthe@Rajinikanth என டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

மாஸ் ஸ்டைல்
ரஜினிகாந்த் என்றாலே ஸ்டைல், கெத்து மாஸ் தான். சூப்பர் ஸ்டாரு யாரு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று சொல்லும் அளவுக்குத்தான் அவரின் புகழ் உயர்ந்து கொண்டே போகிறது.

3 தலைமுறை நடிகர்
மூன்று தலைமுறைகளுக்கு பிடித்த நடிகராகவே இவர் திகழ்ந்து வருகிறார். இவர் சிகரெட் பிடிப்பது, கண்ணாடியை ஸ்டைலாக அணிவது, சிரிச்சிக்கிட்டே கண்ணடிப்பது, குறிப்பா இடுப்புல கைவைத்து கொண்டு நடப்பது என இன்னும் பலவற்றை அடிக்கிட்டே போகலாம்.

விரைவில் டப்பிங் பணி
தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு விட்டன. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சியின் டப்பிங் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

#AnnaattheRajinikanth
ரஜினியின் ரசிகர்கள் தற்போது இணையத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு #AnnaattheRajinikanth என வைரலாக்கி உள்ளனர். இந்த புகைப்படத்தில் ரஜினி மிகவும் இளமையான லுக்கில் சூட் கோட் போட்டுக்கொண்டு இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











