Rajinikanth: இரவில் மொய்தீன் பாய்யை சுற்றி வளைத்த ரசிகர்கள்... கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த்!

புதுவை: மும்பையை தொடர்ந்து லால் சலாம் படப்பிடிப்பு தற்போது புதுவையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், லால் சலாம் படப்பிடிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்தனர்.

இரவு நேரத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை ரசிகர்கள் சுற்றி வளைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

 Rajinikanth: Fans surround Rajinikanth on the sets of Lal Salaam

சூப்பர் ஸ்டாரை சுற்றி வளைத்த ரசிகர்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் வெளியாகவுள்ளன. நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்ட ரஜினி, அடுத்து லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். இதில், ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும், இதில் அவர் மும்பை டான் ஆக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், லால் சலாம் படப்பிடிப்பு தற்போது புதுவையில் நடைபெற்று வருகிறது.

மும்பையை தொடர்ந்து புதுவையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் போர்ஷன் தான் படமாக்கப்படுவதாக தெரிகிறது. இதனால் தற்போது புதுவையில் தங்கியுள்ள சூப்பர் ஸ்டாரை பார்க்க ரசிகர்கள் ஒன்று திரண்டனர். நேற்று காலை தான் புதுவையில் நடைபெறும் லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்ட செய்தி வெளியானது. இதனால், லால் சலாம் படப்பிடிப்புத் தளத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

ஆனால், படப்பிடிப்பு முடிந்து ரஜினிகாந்த வெளியேவர இரவாகிவிட்டது. அதுவரை காத்திருந்த ரசிகர்கள் அவருக்காக தங்களது செல்போன் டார்ச்சை ஆன் செய்து உற்சாக குரல் எழுப்பினர். ஒருகட்டத்தில் ரஜினியின் கார் வெளியேற முடியாதபடி ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். நிலைமையை புரிந்துகொண்ட காவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்த, ரஜினியின் கார் அங்கிருந்து வெளியேறியது.

 Rajinikanth: Fans surround Rajinikanth on the sets of Lal Salaam

அப்போது காரின் ரூஃப் டாப் வழியே முகம் காட்டிய ரஜினிகாந்த், சுற்றி நின்றுகொண்டிருந்த ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். இதனை அவரது ரசிகர்கள் வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், ரஜினி மட்டும் தான் எப்போதும் ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என கூறி வருகின்றனர். லைகா தயாரிக்கும் லால் சலாம் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக உருவாகி வருகிறது. இன்னும் சில தினங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என்றும், இந்தாண்டு இறுதிக்குள் தியேட்டரில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X