Rajini: ஜெயிலர் ஆடியோ லான்ச் பரபரப்பு... லால் சலாம் ஸ்பாட்டில் ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

இன்னொரு பக்கம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்க்க ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 Rajinikanth: Fans surrounded Rajinikanth at the Lal Salaam shooting spot

ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லைன்அப்பில் ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 என அடுத்தடுத்து படங்கள் உள்ளன. இதில் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேநேரம் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம். சென்னையில் நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயிலர் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் நிறைவான நிலையில், தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் சூப்பர் ஸ்டார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, மும்பையை தொடர்ந்து பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் கூடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட புதுவையில் நடைபெற்ற லால் சலாம் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் கலந்துகொண்டார். அப்போது அவரை பார்க்க நள்ளிரவு நேரத்திலும் ரசிகர்கள் கூடினர். அதேபோல் தற்போதும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

லால் சலாம் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பிய சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். இரவு நேரத்திலும் ரஜினிக்காக அவர்கள் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது காரில் சென்ற சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். அதனைப் பார்த்து ரசிகர்களும் "தலைவா... தலைவா.." என ஆர்ப்பரித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அபிஸியல் அப்டேட், எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதற்காகவும் ரஜினி ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X