டிவிட்டரில் திடீரென ட்ரெண்டாகும் ரஜினி ஒரு சகாப்தம் ஹேஷ்டேக்.. என்ன காரணம்? #ரஜினி_ஒரு_சகாப்தம்

சென்னை: டிவிட்டரில் திடீரென ரஜினி ஒரு சகாப்தம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

சோஷியல் மீடியாவை பொறுத்தவரை நாள்தோறும் ஏதாவது ஒரு விஷயத்தை டரெண்டாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் நெட்டிசன்கள். குறிப்பாக தினமும் யாராவது ஒரு நடிகர் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் இடம் பிடித்து விடுகின்றனர்.

யார் ட்ரெண்டிங்கில் டாப்பில் இருக்க வேண்டும் என்ற போட்டியில் நடிகர்களுக்காக ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வதும் தொடர் கதையாகி விட்டது.

நடிகர்களின் ரசிகர்கள்

நடிகர்களின் ரசிகர்கள்

அந்த வகையில் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் நேற்று போட்டி போட்டுக் கொண்டு அவர்களின் பிறந்த நாள் ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர். அந்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகின. அதனை தொடர்ந்து தனுஷ் ரசிகர்களும் அவரது பிறந்த நாள் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

ரஜினி ஹேஷ்டேக்

ரஜினி ஹேஷ்டேக்

இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பரான நடிகர் ரஜினிகாந்த் குறித்த ஹேஷ்டேக் ஒன்று ட்ரெண்ட்டாகி வருகிறது. இந்தியா மட்டுமின்றி, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் என உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிக்காந்த்.

ஊரடங்கால் ஓய்வு

ஊரடங்கால் ஓய்வு

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

டிவிட்டரில் ட்ரெண்டிங்

டிவிட்டரில் ட்ரெண்டிங்

இந்நிலையில் #ரஜினி_ஒரு_சகாப்தம் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரெண்டிங்கில் டாப்பில் உள்ளது. ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள், ரஜினிகாந்த் குறித்து நாளிதழ்களில் இடம்பெற்ற சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பும் இல்லை இதற்கு பிறகும் இல்லை என ரஜினிகாந்த் அரசியல் தலைவர்களுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளனர்.

4 ஜென்ரேஷன்

4 ஜென்ரேஷன்

40 ஆண்டுகள்.. 4 ஜென்ரேஷன் ஃபேன்ஸ் ஃபாலோயிங்.. லட்சக்கணக்கான மக்களுக்கு இன்ஸ்பையரேஷன்.. ஆள வா தலைவா.. என குறிப்பிட்டுள்ளார் இந்த ரசிகர். தமிழ் சினிமாவில் ஒரே ஒரு ரசிகர் 14 தொழில்களை வெற்றி பெற செய்யும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் என தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.

தூய ஆத்மா..

தூய ஆத்மா..

தலைவர் ஒரு ஒழுக்கமான மனிதனாக என் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகிப்பார். நடித்தார்.. தொடர்ந்து நடிப்பார். அவரைப் போன்ற ஒரு தூய ஆத்மாவாக இருக்க முயற்சி செய்யுங்கள், ஆனால் முடிந்தவரை மனிதநேயத்துடன் இருப்பது மிகவும் கடினம் என்று எனக்குத் தெரியும். நல்ல ஆரோக்கியத்துடன் கடவுள் அவரை ஆசீர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

Recommended Video

GVM next Project with Kamal Hassan | Vettaiyadu Vilaiyadu | Anushka
காரணம் வெளியாகவில்லை

காரணம் வெளியாகவில்லை

தொடர்ந்து ரஜினிகாந்தை பாராட்டியும் புகழ்ந்தும் ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் திடீரென இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட் செய்யப்படுவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X