உலக நாயகன்னு உருட்ட வேண்டியது.. ஒரு ஆஸ்கர் கூட வாங்கல.. கமல்ஹாசனை வம்பிழுக்கும் ரஜினி ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படாத நிலையில், தனியாக பல பிரிவுகளில் கலந்து கொண்ட நிலையில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சூர்யா உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவை பாராட்டி ட்வீட் போட்ட நிலையில், அதற்கு கீழ் ஏகப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் நீங்க எப்போ கமல் ஆஸ்கர் விருது வாங்க போறீங்க என ஏகப்பட்ட ட்ரோல்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

கமல் பாராட்டு
"நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் இந்தியனாகவும், சக கலைஞனாகவும் உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன். இசையமைப்பாளர் கீரவாணிக்கு, இயக்குநர் ராஜமெளலிக்கும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்." என கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி நன்றி
கமல்ஹாசனின் வாழ்த்து செய்தியை பார்த்ததும் சந்தோஷத்தில் மிதந்த இயக்குநர் ராஜமெளலி நன்றி சார் என ட்வீட் போட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மகேஷ் பாபுவின் படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும், தனியாக ஒரு படத்தை கமலை வைத்தே ராஜமெளலி இயக்கப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

கிண்டலடிக்கும் ரஜினி ரசிகர்கள்
ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினரை உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டிய நிலையில், ஓடோடி வந்த ரஜினி ரசிகர்கள் ஆஸ்கர் பாத்திர கடையில் நமக்கு ஒரு ஆஸ்கர் ரெடி பண்ணுங்கோ என கமல் உட்கார்ந்து இருப்பது போல ட்ரோல் மீம்களை போட்டு வருகின்றனர்.

இது உலகளாவிய உச்சம் இல்லை
கமல்ஹாசன் ஆங்கிலத்தில் அமெரிக்காவின் அங்கீகாரம் இது என குறிப்பிட்டதை போலவே தமிழிலும் குறிப்பிட்டு இருக்கலாம் என்றும் இது நீங்கள் சொன்னதை போலவே உலகளாவிய உச்சம் இல்லை என கமலின் ட்வீட்டை வைத்தே இந்த நெட்டிசன் சாடி உள்ளார்.

விருதுக்கு கொடுத்து வைக்கவில்லை
"காந்தியாருக்கு நோபிள் கிடைக்கவில்லை
பெரியாருக்கு பாரத ரத்னா கிடைக்கவில்லை
சிவாஜிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை
கமலுக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை
விருதுகள் கொடுத்துவைக்கவில்லை என்ன செய்ய?" -- மணிகண்டன் பெரியாரின் பேரன் என இந்த ரசிகர் ட்வீட் போட்டு கமல் ரசிகர்களை சாந்தப்படுத்தி உள்ளார்.

அது எப்போதான் கிடைக்குமோ ஆண்டவா
உலக நாயகன் கமல்ஹாசனின் பல திரைப்படங்கள் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டாலும் இதுவரை ஒன்று கூட நாமினேஷனில் கூட இடம்பெறவில்லை. அது எப்போதான் கிடைக்குமோ ஆண்டவா என நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இதுக்கு ஒரு ஆஸ்கர் தரலையே
விஸ்வரூபம் படத்தில் ஆண்ட்ரியாவுடன் லிப் லாக் அடிக்கும் காட்சியை பதிவிட்டு இதுக்கு ஒரு ஆஸ்கர் தரலையே என ரஜினி ரசிகர்கள் ரொம்பவே மோசமாக வம்பிழுத்து வருகின்றனர். அதே சமயம் கமல்ஹாசனை போல உலகளவில் சிறந்த நடிகரே இல்லை என்றும் அவர் மட்டும் ஹாலிவுட் படங்களில் நடித்தால் பல ஆஸ்கர் விருதுகளை அள்ளியிருப்பார் என்றும் கமல் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ரஜினி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கமல் பேட்டி
ஆஸ்கர் ஒன்றும் உலகத் தரமான விருது கிடையாது என்றும் அது அமெரிக்க தரமான விருது தான் என கமல்ஹாசன் முன்னதாக பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த பேட்டையையும் சேர்த்து ஷேர் செய்து ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகளவில் ட்ரோல் செய்து வருகின்றனர். தசாவதாரம் பாடலில் ஆஸ்கரும் தூரமில்லை என்கிற வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதனையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











