அண்ணாத்த படத்தில் இணைந்த வேலாயுதம் வில்லன்.. சன் பிக்சர்ஸை வச்சு விளாசும் ரஜினி ரசிகர்கள்!

சென்னை: அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் எனக் கூறிவிட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது படத்தில் புதிய காஸ்ட் அறிவிப்பை அறிவிக்கிறீங்களே என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் சன் பிக்சர்ஸை கழுவி ஊற்றி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் வேலாயுதம் படத்தில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் அண்ணாத்த படத்தில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளார்.

கொல்கத்தாவில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இவரது போர்ஷன் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்ணாத்த அப்டேட்

அண்ணாத்த அப்டேட்

விரைவில் அண்ணாத்த படத்தின் மாஸ் அப்டேட் கம்மிங் சூன் என சன் பிக்சர்ஸ் தெரிவித்ததும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தான் வரப் போகிறது என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில், திடீரென இன்னொரு நடிகர் படத்தில் இணைந்துள்ளதாக வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகி உள்ளனர்.

இரண்டு ஆண்டுகள்

இரண்டு ஆண்டுகள்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை அடுத்து அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

சன் பிக்சர்ஸ்

சன் பிக்சர்ஸ்

லைகா தயாரிப்பில் 2.0 மற்றும் தர்பார் படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் இணைந்தார். தல அஜித்தை வைத்து விஸ்வாசம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

முன்னணி நடிகைகள்

முன்னணி நடிகைகள்

ஏற்கனவே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த மீனா மற்றும் குஷ்பு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். சந்திரமுகி, குசேலன், தர்பார் படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்த நயன்தாராவும் இந்த படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக இந்த படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

தாமதப்படுத்திய கொரோனா

தாமதப்படுத்திய கொரோனா

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து இந்நேரம் ரிலீசாகி இருக்க வேண்டும் ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகி வருகிறது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சில ஊழியர்களுக்கு கொரோனா பரவ அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு வரும்

தீபாவளிக்கு வரும்

உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்தும் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சன் பிக்சர்ஸ் இந்த ஆண்டு தீபாவளிக்கே அண்ணாத்த வெளியாகி விடும் என அஜித்தின் வலிமை ரிலீசுக்கு பிரச்சனையை கிளப்பியது.

ஷூட்டிங் முடியல

ஷூட்டிங் முடியல

ஆனால், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடியவில்லை. கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களில் சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், படத்தின் டப்பிங், எடிட்டிங் என ஏகப்பட்ட தயாரிப்பு பணிகளும் இன்னமும் முடிவு பெறாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.

அடுத்த ஆன்போர்ட்

அடுத்த ஆன்போர்ட்

அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்து விட்டு தற்போது சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்திற்கு ஆன்போர்ட் விடுவது போல அண்ணாத்த படத்திற்கு புதிதாக ஆன்போர்ட் அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை அப்செட் ஆக்கி இருக்கிறது. இப்போதான் இந்த நடிகர் படத்தில் இணைந்து நடித்து படம் எப்போது வெளியாகும் என பயங்கர கடுப்பில் ரஜினிகாந்த் ரசிகர்கள் உள்ளனர்.

வேலாயுதம் வில்லன்

வேலாயுதம் வில்லன்

தளபதி விஜய்யின் வேலாயுதம், தலைவா மற்றும் நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் அண்ணாத்த படத்தில் புதிதாக இணைந்துள்ளார் என்கிற அறிவிப்பை தான் சற்று முன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

என்ன விளையாடுறியா

என்ன விளையாடுறியா

அண்ணாத்த படம் பற்றிய அப்டேட் வெளியான நிலையில், ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள் என எதிர்பார்த்த சன் பிக்சர்ஸ்க்கு வெறும் அர்ச்சனைகள் தான் குவிந்து வருகின்றன. படம் தீபாவளிக்கு ரிலீஸ்னு சொல்லிட்டு.. இப்போ போய் காஸ்ட் அப்டேட் விடுற.. என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

யார்ரா இவன்

யார்ரா இவன்

யார்ரா இவன் தீபாவளிக்கு படம் ரிலீஸ்னு சொல்லிட்டு.. இப்போ போய் காஸ்ட் அப்டேட் போடுறான்னு வித விதமாக ட்ரோல் போட்டோ மீம்களை போட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் சன் பிக்சர்ஸை வேற லெவலில் கலாய்த்து வருகின்றனர்.

பொங்கலுக்காவது

பொங்கலுக்காவது

கொரோனா 3ம் அலை காரணமாக தியேட்டர்கள் திறக்க இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தீபாவளிக்கு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அண்ணாத்த, வலிமை போன்ற பெரிய படங்கள் ரிலீஸ் ஆனால் மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வருமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம் அதனால், பொங்கலுக்குத் தான் புதிய படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிடி பேச்சு

ஒடிடி பேச்சு

தல அஜித்தின் வலிமை மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களையும் ஒடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மத்தியில் கடும் போட்டிகளும் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில் தியேட்டரில் வந்தாலும் அடுத்து ஒடிடி தானே என்கிற நிலையில், எந்த ஒடிடிக்கு இவர்களின் படம் செல்லும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X