6 படம் அட்டு ஃபிளாப்.. ரஜினிகாந்துக்கே வஞ்சப்புகழ்ச்சியா.. விஜய் தேவரகொண்டா இப்படி சிக்கிட்டாரே!
சென்னை: குஷி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில், அளித்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 6 ஃபிளாப் படங்களை கொடுத்த நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் மூலம் 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்துள்ளார் என்று பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் பெரும் நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் தேவையில்லாத பேச்சால் அவருக்கு பேக் ஃபயராகி விடும் சூழல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ரஜினிகாந்த் 6 ஃபிளாப் கொடுத்தாரா, அதை நீ பார்த்த என விஜய் தேவரகொண்டாவை சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் துவைத்து தொங்கப்போட்டு வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டாவின் வஞ்சப்புகழ்ச்சி: ஜெயிலர் திரைப்படத்தை தென்னிந்திய சினிமாவே கொண்டாடி வரும் நிலையில், குஷி படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் தொடர்ந்து உங்கள் படம் தோல்வியை தழுவி வருகிறதே, இந்த படம் எப்படி இருக்கும் என முன் வைக்கப்பட்ட கேள்விக்கு, ரஜினிகாந்த் 6 ஃபிளாப் படம் கொடுத்து இப்போ ஜெயிலரில் நடித்து 500 கோடி வசூல் பெறவில்லையா என தானும் நிறைய தோல்விகளை கொடுத்தாலும் ஹிட் கொடுப்பேன் என்கிற ரீதியில் பேசியிருந்தார்.
அதை பார்த்த ரசிகர்கள், ஜெயிலர் 500 கோடி வசூலை பெருமையாக விஜய் தேவரகொண்டா சொல்லாமல், அவர் முன்னதாக 6 தோல்விப் படங்களை கொடுத்தவர் என சுட்டிக் காட்டி கலாய்த்திருக்கிறார். இது புகழ்ச்சியல்ல, வஞ்சப்புகழ்ச்சி என ட்ரோல்கள் பறக்கத் தொடங்கின.
விளாசும் ரசிகர்கள்: 169 படங்கள் நடித்து முடித்து விட்டு 170வது படத்தில் நடிக்க உள்ள ரஜினிகாந்த் உடன் விஜய் தேவரகொண்டா தன்னை கம்பேர் செய்துக் கொள்வதே சரியான அணுகுமுறை கிடையாது என்றும் சூப்பர்ஸ்டார் நடித்த படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூலில் வெற்றி பெற்று விடும். விஜய் தேவரகொண்டாவின் லைகர் போல தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் தலையில் துண்டுப் போட்டுக் கொண்டு தலைமறைவானது போல நடக்காது என ரஜினி ரசிகர்கள் அடி வெளுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











