எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா.. சிரஞ்சீவியே சிரிக்கிறாரு.. விஜய்யை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!

சென்னை: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு பேசிய பேச்சு ஏகப்பட்ட ட்ரோல் மீம்களாக டிரெண்டான நிலையில், அதை வைத்து நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் பேசி சிரித்த வீடியோவை ஷேர் செய்துர் ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து வருகின்றனர்.

வாரிசு ஆடியோ லாஞ்சில் சரத்குமார் சூப்பர்ஸ்டார் என விஜய்யை அழைக்க ரஜினி vs விஜய் ரசிகர்கள் சண்டை விஸ்வரூபம் எடுத்தது. வாரிசு மற்றும் துணிவு படங்கள் போட்டியாக வெளியான நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை அதிகரித்து வந்த நிலையில், அந்த சண்டை அப்படியே இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் சண்டையாக மாறியது.

Rajinikanth fans trolls Vijay with Chiranjeevis Varisu audio launch dialogue video

ரஜினி vs விஜய் ரசிகர்கள் சண்டை: இந்நிலையில், சமீபத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அர்த்தமாயிந்தா ராஜா என்றெல்லாம் ரஜினிகாந்த் பொடி வச்சு பேசியது, மற்றும் நல்லவர்கள் சாபம் சும்மா விடாது என பேசியது எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட சீனியர் நடிகர்களை சிலாகித்துப் பேசியது என மறைமுகமாக விஜய்க்குத் தான் ரஜினி பாடம் நடத்தினார் என ரஜினி ரசிகர்கள் அலப்பறையை அமர்க்களப்படுத்தி வந்தனர்.

நடிகர் ரஜினிகாந்தை விஜய் எப்போதுமே தலைவர் என்று தான் அழைப்பார் என்றும் ஜெயிலர் படத்தின் ஷோகேஸை பார்த்து விட்டு முதல் ஆளாக நெல்சனை போன் செய்து பாராட்டினார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து ரசிகர்கள் சண்டையை இதுதான் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு என பயன்படுத்தி பஞ்சாயத்தைக் கூட்டி வருகின்றனர்.

சிரஞ்சீவியே சிரிச்சிட்டாரு: அஜித்தின் வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்துள்ள சிரஞ்சீவி சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது பேசும் போது ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, காமெடி வேணுமா அதுவும் இருக்கு, சென்டிமென்ட் வேணுமா சென்டிமென்ட் இருக்கு என்பதை செம நக்கலாக சிரித்துக் கொண்டே சிரஞ்சீவி பேசிய வீடியோ ஒன்று அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதெல்லாம் எவ்ளோ அசிங்கம் தெரியுமா: அந்த வீடியோவை ஷேர் செய்து ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை சோஷியல் மீடியாவில் பங்கம் செய்து வருகின்றனர். இதெல்லாம் எவ்ளோ அசிங்கம் தெரியுமா என கமெண்ட் போட்டு அந்த வீடியோவை பகிர்ந்து மீண்டும் விஜய் vs ரஜினி ரசிகர்கள் சண்டையை ஸ்டார்ட் செய்துள்ளனர். ஜெயிலர் படத்தின் ரிலீஸ் வரை இந்த சண்டை போகுமா? அல்லது லியோ பட ரிலீஸ் வரை தொடருமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X