தலைவா உனக்கு காது கேட்கலையா.. எங்க சிவனே வெளியே வா.. ரஜினி வீட்டு வாசல் முன் தவிக்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரை காண அவரது ரசிகர்கள் பலரும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு முன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எங்க குலசாமி என்றும் எங்க சிவனே வெளியே வா.. சிவாஜிராவ் வெளியே வா என ரசிகர்கள் கோஷம் போட்டு வருகின்றனர்.

தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பிறந்தநாள் அன்று சந்திப்பாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ரஜினிகாந்த் பிறந்தநாள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பெங்களூரில் பிறந்த நிலையில், இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன், ஜூனியர் என்டிஆர், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காத்திருக்கும் ரசிகர்கள்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என பல வருடங்களாக அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆன்மீக அரசியல் செய்யப் போவதாகவும் இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என பரபரப்பு கிளப்பிய ரஜினிகாந்த், பின்னர் இப்பவும் இல்லை எப்பவும் இல்லை என தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்காமல் முடித்து விட்டார். ஆனால், தொடர்ந்து சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எப்படியாவது சந்தித்து ஒரு வாழ்த்து சொல்லி விட வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது வீட்டிற்கு முன் காத்து கிடக்கின்றனர். நடிகர் ஷாருக்கான் ஆண்டுதோறும் மனாட்டில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், ரஜினிகாந்தும் அப்படி ரசிகர்களை சந்திக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.
காது கேட்கலையா தலைவா: எங்கள் குல சாமியே என்றும், நாங்கள் வழிபடும் சிவனே, சிவாஜி ராவே.. என்னைக்கும் தாய் தகப்பன் வைத்த பெயர் மாறாது என ரசிகர்கள் கோஷமிட்டு வருகின்றனர். மேலும், உச்சகட்டமாக சென்று நாங்கள் அழைப்பது காது கேட்கவில்லையா தலைவா என ரசிகர்கள் கோஷமிட்டு வரும் வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் ஊரில் இல்லை என்றாலும் அவரது பிறந்தநாள் அன்று அவரைக் காண விரும்பும் ரசிகர்களுக்காக வீட்டின் அருகே வரவேற்று விருந்து போடலாமே என்றும் அல்லது வீடியோ ஒன்றை ரஜினி வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு தரிசனம் தரலாமே என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications











