“மீண்டும் வருமா இந்த நாள்“... புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் வேதனை !

சென்னை : நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார். இதை ஐஸ்வர்யாவும் பிரிவை உறுதி செய்துள்ளார்.

இருவரின் பிரிவு விவகாரம் இவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் கடைசியாக குடும்பமாக விருதுவழங்கும் விழா புகைப்படத்தை பகிர்ந்து வருத்தப்பட்டு வருகின்றனர்.

2004ல் திருமணம்

2004ல் திருமணம்

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இயக்குனர் கஸ்துாரி ராஜாவின் இளைய மகனான இவர், தன் 16 வயதில் நடிக்க வந்தார். 2004ல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.

முன்னணி நடிகர்

முன்னணி நடிகர்

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலிவுட், ஹாலிவுட், தற்போது தெலுங்கு என ஒரே நேரத்தில் பன்மொழிகளில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி, பாடகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக வலம் வரும் தனுஷ்.

பிரிகிறோம்

பிரிகிறோம்

இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், 18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம்.

சோகத்தில் ரசிகர்கள்

சோகத்தில் ரசிகர்கள்

எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் இதே அறிவிப்பை வெளியிட்டு பிரிவை உறுதி செய்தார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil
குடும்பமாக

குடும்பமாக

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்வே விருது வழங்கப்பட்டது. அதே விழாவில் தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். இந்த விழாவில் ரஜினி, லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷின் இரு மகன்கள் என ஒட்டுமொத்த குடும்பமே கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

மீண்டும் வருமா இந்த நாள்

மீண்டும் வருமா இந்த நாள்

ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் கடைசியாக விருது வழங்கும் விழாவில் குடும்பமாக கலந்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் தங்களது வேதனை அடைந்து வருகின்றனர். பொதுவாக விருதுகளை கண்டுக்கொள்ளாத ரஜினி இதில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டார். விருதுக்குப்பின் மாமா மருமகன் ஒன்றாக மெடலை காண்பித்து எடுத்த போட்டோவை பகிர்ந்து இருந்தனர். சந்தோஷமான அந்த தருணத்தை போட்டோவை பதிவிட்டு மீண்டும் வருமா இந்த நாள் என அனைவரும் வருத்தப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X