ரஜினிக்கே அந்த பயம் இருந்தது.. ராமராஜன் பட விழாவில் அம்பலப்படுத்திய கே.எஸ். ரவிக்குமார்!

சென்னை: 63 வயதாகும் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் படம் விரைவில் ரிலீஸாக காத்திருக்கிறது. சமீபத்தில், நடைபெற்ற அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கே.எஸ். ரவிக்குமார் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ராமராஜன் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடித்துள்ள சாமானியன் படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் துணிவு படத்தை போல வங்கி கொள்ளை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

”மாங்குயிலே பூங்குயிலே” என கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் ஆடியதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டதை விட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நமக்கே டஃப் கொடுக்க ஒரு செம போட்டியாளன் வந்து விட்டானே என பொறாமைப்படத்தான் செய்திருக்கின்றனர்.

Rajinikanth feared about Ramarajan box office opening revealed by KS Ravikumar


நடிகர் ராமராஜன்:
நடிகர் மோகனை போல ராமராஜனும் வெள்ளி விழா நாயகனாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர். வி. அழகப்பன் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ராமராஜன் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை வென்றார்.

மக்கள் நாயகன்: எம்ஜிஆரின் ரசிகரான ராமராஜன் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவதாரமெடுத்தார். 1987ம் ஆண்டு வெளியான ’ஒன்று எங்கள் ஜாதியே’ படத்தை இயக்கி நடித்திருந்தார். அதன் பின்னர் எங்க ஊரு காவல்காரன் படத்தில் அவருக்கு மக்கள் நாயகன் டைட்டில் வழங்கப்பட்டது. கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், என்ன பெத்த ராசா, ராஜா ராஜாதான் என ஏகப்பட்ட படங்களில் நடித்து கிராமத்து மக்களின் பேராதரவை பெற்று முன்னணி நடிகராக மாறினார்.

Rajinikanth feared about Ramarajan box office opening revealed by KS Ravikumar

சாமானியன் பட விழா: 2001ம் ஆண்டு சீறி வரும் காளை படத்தில் நடித்த ராமராஜன் 2012ம் ஆண்டு மேதை படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. நேற்று முன் தினம் அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் ராமராஜனை பாராட்டி பேசினர். இந்தப் படத்துக்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியே பயந்தாரு: அந்த விழாவில் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஒருமுறை ராமராஜன் படத்தின் ஓபனிங் வசூலை அறிந்துக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எங்க இவரு நம்ம கிட்டயே வந்துட்டாரே என்றும் அவரை பார்த்தா பயமா இருக்கு என்றும் கூறினார் என கே.எஸ். ரவிக்குமார் பேசியுள்ளார். அந்த அளவுக்கு மாஸ் காட்டிய ராமராஜன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்தே காணாமல் போய் விட்டார். பல ஆண்டுகள் கழித்து அவர் நடித்துள்ள சாமானியன் டிரெய்லரை பார்க்கவே பாவமாக இருக்கிறது என ரஜினி ரசிகர்கள் பதிலுக்கு கலாய்த்து வருகின்றனர்.

சாமானியன் சாதிக்குமா?: ராமராஜன் ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்துள்ளார் என தெரிகிறது. டிரெய்லரை பார்த்தாலே இந்த படம் வெளியானால் ரிசல்ட் என்னவாகும் என்று தெரிகிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பழைய ராமராஜனை இனிமேல் பார்க்க முடியாது என்றும் மைக் மோகன் போல அவரும் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தால் நல்லா இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X