பவதாரிணி மறைவு.. ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?.. அவசர அவசரமா கிளம்பி போறாரே!

சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று மாலை 5.30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்த நிலையில், இன்று மாலை சென்னையில் உள்ள இல்லத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. பழம்பெரும் நடிகர் சிவகுமார், நடிகர் விஜய்யின் அம்மாவும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் சென்று பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், போயஸ் கார்டனில் இருந்து கிளம்பிய நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த செய்தியாளர்களிடம் பவதாரிணியின் மறைவு குறித்து பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவே நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

Rajinikanth feels so bad about Ilayaraja daughter Bhavatharini sudden demise

பவதாரிணி மறைவு: பித்தப்பை கல் என ஆரம்பத்தில் பெரிதாக கண்டுக் கொள்ளாமல் விட்டு விட்ட நிலையில், அது சிறுநீரக புற்றுநோயாக மாறி குணப்படுத்தவே முடியாத அளவுக்கு வளர்ந்து விட்ட நிலையில் தான் இளையராஜா குடும்பத்தினருக்கே தெரியும் என்றும் பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலனளிக்காத நிலையில், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்தி விடலாம் என நினைத்த நிலையில், நேற்று மாலை இலங்கையில் சிகிச்சை பலனின்றி பவதாரிணி உயிர் பிரிந்தது.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி: சென்னை, தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு தேனிக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை அங்கே இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாக்கியராஜ், சிவகுமார், ஸ்ரீகாந்த், ஷோபா சந்திரசேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பவதாரிணியின் உடலுக்கு நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி சென்ற காட்சிகள் ரசிகர்களை கண்ணீர் மல்க செய்துள்ளன.

ரஜினிகாந்த் இரங்கல்: காலையிலேயே உலகநாயகன் கமல்ஹாசன் தனது இரங்கல் பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவுக்காக கிளம்பிக் கொண்டிருந்த நிலையில், அவரை சந்தித்த செய்தியாளர்கள் பவதாரிணியின் மறைவு குறித்து கேட்டனர். ரொம்ப வருத்தமா இருக்கு எல்லாவற்றையும் பற்றி ஆடியோ லாஞ்சில் பேசுறேன் என சொல்லி விட்டு ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார்.

லால் சலாம் ஆடியோ லாஞ்ச்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், தம்பி ராமைய்யா, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன்களும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X