Rajinikanth: தனுஷ் காலில் ரஜினிகாந்த் விழுந்தாரா.. என்னங்க சொல்றீங்க? சுசித்ரா தூக்கிப் போட்ட குண்டு

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு கடந்த சில ஆண்டுகளாகவே குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. விவாகரத்துக்கு அப்ளை செய்துவிட்டு முதல் முறைமட்டும் நீதிமன்றத்துக்கு வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அதன் பின்னர் பல வாய்தாக்கல் போட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கு இருவரும் பிஸியாக சினிமா பணிகளில் இருப்பதுதான் காரணம் எனக் கூறப்பட்டாலும், இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டதாகவும் பேச்சுகள் ஓடிக்கொண்டு உள்ளன.

இப்படியான நிலையில் இவர்கள் சேர்ந்து வாழ முடிவெடுக்க முக்கிய காரணமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், பின்னணிப் பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

rajinikanth dhanush aishwarya rajinikanth

நயன்தாரா தனது திருமண டாக்குமெண்டரியை ரிலீஸ் செய்வதில் தனுஷ் எந்த அளவுக்கு தொல்லை கொடுத்தார் என மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலையும் பரபரப்பாக்கியுள்ளார். இதன் மூலம் தனது டாக்குமெண்டரிக்கு நயன் விளம்பரம் தேடிக்கொண்டதாகவும், தனுஷ் மீது தனக்கு இருந்த நீண்டநாள் கோபத்தினை இறக்கி வைத்துள்ளதாகவும் பலர் கூறி வருகின்றனர்.

rajinikanth dhanush aishwarya rajinikanth

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பின்னணிப் பாடகி சுசித்ரா தனுஷ் குறித்தும் தனுஷ் விவாகரத்து குறித்தும் தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தினை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்று கொண்டு இருந்தது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

rajinikanth dhanush aishwarya rajinikanth

தனுஷ் - ஐஸ்வர்யா: தனுஷ்ஷை வைத்து ஐஸ்வர்யா 3 என்ற படத்தினையும் இயக்கினார். இந்தப் படம் பெரிய ஹிட் அடித்தது. தொடர்ந்து குடும்ப வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் தாங்கள் விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இருவரும் கோ பேரண்டிங் முறையில் குழந்தைகளை கவனித்து வருகின்றனர்.

rajinikanth dhanush aishwarya rajinikanth

ரஜினிகாந்த்: இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து இல்லறவாழ்க்கையில் வாழவேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரும் விவாகரத்து குறித்து அறிவிக்கும் முன்னரே, ரஜினிகாந்த் இருவரிடமும், குறிப்பாக தனுஷ்ஷிடம் எவ்வளவோ பேசியும் கேட்காமல் விவாகரத்தினை அறிவித்தாகவும் கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் சுசித்ராவின் கருத்து பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது.

rajinikanth dhanush aishwarya rajinikanth

காலில் விழுந்த ரஜினி: அதாவது, அவர் பேசுகையில், " தனுஷ் காலில் விழுந்து சூப்பர் ஸ்டார் தனுஷ்ஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைத்தாராமே. சூப்பர் ஸ்டார் முழுவதுமாக கரைந்து போய் ஒன்றுமே இல்லாமல் நிற்கின்றார். ரஜினிகாந்த் மீது மரியாதையே இல்லை. அவர் சுத்தமாக காலி ஆகிவிட்டார். நயன் பிரச்னையில் தனுஷ்க்கு பணம் தான் கொடுக்க முடியுமே தவிர, வாய் வார்த்தையாக எங்கும் பேசமாட்டார் என நான் நினைக்கின்றேன்" எனப் பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X