Rajinikanth - மதத்தை மனசுல வை மனிதநேயத்த மேலே வை.. ரஜினிகாந்த் பேசியதை பாருங்க.. ட்ரெண்டிங் வீடியோ
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) லால் சலாம் படத்தின் டப்பிங் பணியை நடிகர் ரஜினிகாந்த் முடித்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டு சில வருடங்களுக்கு முன்பு அந்தத் திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. அதேசமயம் மேக்கிங்கில் முதிர்ச்சியடைந்திருதார் ஐஸ்வர்யா.
லால் சலாம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக ரஜினிகாந்த் இருக்கிறார்.
மொய்தீன் பாய்: லால் சலாமில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறார். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் கபில்தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.

ஷூட்டிங் ஓவர்: மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. எனவே அதே வைபோடு லால் சலாம் படமும் ஹிட்டாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளை ஐஸ்வர்யா தொடங்கியிருக்கிறார்.
டப்பிங் பணிகள்: இந்நிலையில் ரஜினிகாந்த் லால் சலாம் படத்துக்கான தனது டப்பிங் பணியை முடித்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் டப்பிங் ஸ்டூடியோவுக்கு ரஜினிகாந்த், "மதத்தையும், நம்பிக்கையையும் மனசுக்குள்ள வை; மனிதநேயத்த மேலே வை; அதுதான் நம் நாட்டோட அடையாளம்" என படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தை பேசும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











