Rajini: கடைசியில தங்கச்சி கீர்த்தி சுரேஷை டீலில் விட்டுட்டாரே அண்ணாத்த.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய நடிகை கீர்த்தி சுரேஷை வெறும் பாடல் காட்சிக்கு மட்டும் குத்தாட்டம் போட வைத்து மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் வீணடித்து விட்டார் என கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் ஏற்கனவே செம காண்டில் உள்ள நிலையில், ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் பாராட்டு ட்வீட் மேலும், அவர்களை கடுப்பாக்கி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த மாமன்னன் படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்காத நிலையில், நேற்று இரவு படத்தை பார்த்து விட்டு பாராட்டி உள்ளார்.

மாமன்னனை பாராட்டிய மன்னன்: "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்." என நடிகர் ரஜினிகாந்த் மாமன்னன் படத்தை பார்த்து விட்டு பாராட்டி உள்ளார்.
ரஜினிகாந்தின் பாராட்டை பார்த்த உடனே இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னை நேரிலேயே அழைத்து ரஜினி சார் பாராட்டினார் என போட்டோக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
தங்கச்சியை மறந்த அண்ணாத்த: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாமன்னன் படம் குறித்தும் அந்த படத்தில் நடித்த வடிவேலு, பகத் ஃபாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு மிகச் சிறப்பு என ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில், படத்தில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷை ரஜினிகாந்த் டீலில் விட்டு விட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷை வெறும் டான்ஸ் ஆட மட்டுமே மாரி செல்வராஜ் பயன்படுத்திக் கொண்டார் என்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற திறமையான நடிகைக்கு ஏற்ற காட்சிகளை வடிவமைத்து அவரது நடிப்பு பசிக்குத் தீனிப்போட மாரி செல்வராஜ் தவறியதால் தான் யாருமே இந்த படத்தில் கீர்த்தி சுரேஷை பாராட்டவில்லை என கமெண்ட்டுகள் குவிகின்றன.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுக்கே டயலாக் இல்லை: கீர்த்தி சுரேஷை போலவே மாமன்னன் படத்தில் பகத் ஃபாசில் மனைவியாக நடித்த டப்பிங் கலைஞர் ரவீனா ரவிக்கு ஒரு டயலாக் கூட மாரி செல்வராஜ் எழுதவில்லை என்றும் மாமன்னன் படத்தில் பெண்களை மாரி செல்வராஜ் ஒதுக்கித் தள்ளி விட்டார் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











