Rajinikanth Speech - உட்கார்ந்து பார்த்தேன் படுத்து பார்த்தேன்..ம்ஹூம் முடியல.. லோகேஷ் கனகராஜை கலாய்த்த ரஜினி

சென்னை: கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்துவருகிறது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். விழாவில் ரஜினி என்ன பேசப்போகிறார் என பலரும் எதிர்பார்த்திருந்தர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே நகைச்சுவையாகவும், எதார்த்தமாகவும் நிகழ்ச்சியில் பேசினார் அவர். அது பலரிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் இப்போது ரஜினியை வைத்து இயக்கியிருக்கும் கூலி படம் பெரிய ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தான் கொடுக்கும் பேட்டிகளில் சைலெண்ட்டாக படத்துக்கு ஹைப் ஏற்றாமல் பேசினாலும்; ரஜினி - லோகேஷ் கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதால் இயல்பாகவே ஹைப் ஏறிவிட்டது.

இந்த மாதம் ரிலீஸ்: படமானது இன்னும் 12 நாட்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிம வியாபாரம், வெளிநாடு வியாபாரம், ப்ரீ புக்கிங் என அத்தனையும் இதுவரை பாசிட்டிவ் டோனில்தான் போய்க்கொண்டிருக்கின்றன. எனவே தமிழ் சினிமா இதுவரை ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்ததே இல்லை என்ற ஏக்கம் இந்தப் படத்தின் மூலம் போய்விடும் என்பது ஃபேன்ஸின் திண்ணமான நம்பிக்கை.

Rajinikanth Funny Speech about Lokesh Kanagaraj in Coolie Audio Launch
Photo Credit:

இசை வெளியீட்டு விழா: படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. விழா தொடங்கியவுடன் கூலி ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இப்படத்தில் துப்பாக்கி, போதை பொருள் உள்ளிட்டவை இருக்காது என இயக்குநர் ஒரு பேட்டியில் கூறியிருந்தாலும்; ட்ரெய்லரில் கத்தி, துப்பாக்கிகள் வரத்தான் செய்கின்றன. அதுமட்டுமின்றி நண்பர் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்குவதுதான் படத்தின் ஒன் லைனோ என்று ட்ரெய்லரை பார்க்கையில் தோன்றுகிறது.

ரஜினி மாஸ்தான்: அதேசமயம் லோகி கண்டிப்பாக மேக்கிங்கில் தரமான செய்கை செய்துவிடுவார் என கருதப்படுகிறது. முக்கியமாக ட்ரெய்லரில் ரஜினிகாந்த்தை பார்க்கையில் அவ்வளவு எனர்ஜியாக இருக்கிறார். 74 வயதிலும் எப்படி ஒருவரால் இவ்வளவு உற்சாகத்தோடு இருக்க முடிகிறது என அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் ஒட்டுமொத்தமாக ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ரஜினியின் பேச்சு: இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன பேசப்போகிறார் என்பதுதான் பலரது ஆவல். பொதுவாகவே எதார்த்தமாகவும், ஈகோ எதையும் காண்பிக்காமல் பேசும் அவர்; கூலி இசை வெளியீட்டு விழாவிலும் அப்படித்தான் பேசியிருக்கிறார். படத்தின் ப்ரோமோஷனுக்காக லோகேஷ் கொடுத்த பேட்டிகள் குறித்து பேசிய அவர், "கூலி படம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் 2 மணி நேரம் பேட்டி கொடுத்தார். உட்கார்ந்து பார்த்தேன் முடியவில்லை. படுத்து பார்த்தேன் முடியவில்லை. தூங்கி எழுந்து பார்த்தேன் அப்போதும் முடியவில்லை" என்றார். இந்தப் பேச்சு ஒட்டுமொத்த நேரு ஸ்டேடியத்தையும் சிரிப்பலையில் மூழ்க வைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X