100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி.. கமல், அஜித், விஜய், சூர்யாவிடம் கோரிக்கை விடுத்த லாரன்ஸ்!
சென்னை: ரஜினிகாந்த் 100 மூட்டைகள் அரிசி வழங்கியதை தொடர்ந்து கமல், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோரிடமும் நடிகர் லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறை முற்றிலும் முடங்கியிருப்பதால் தினக்கூலியை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பலர் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வறுமையில் தவிக்கும் மக்களுக்கு பலரும் உணவு வழங்குவது, உணவுப்பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்குவது என உதவி செய்து வருகின்றனர்.

கோடிகள்
அந்த வகையில் நடிகர் லாரன்ஸ், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பணமாகவும் மளிகைப் பொருட்களாகவும் வாரி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே 4 கோடி வரை நிதி உதவி செய்திருக்கும் லாரன்ஸ், பலருக்கும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார்.

ஏழைகளுக்கு உதவி
இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்திருக்கிறார். அதில், இதுவரை தான் அனைத்தையும் பகிர்ந்திருக்கிறார். நிவாரண நிதிகளை நன்கொடையாக கொடுத்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏழைகளுக்கு உதவுவதன் மூலம் தனது கடமையை எப்படி செய்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

தம்பியிடம் பேசி
பலரும் தன்னிடம் உதவி கேட்டு தன்னை தொடர்பு கொண்டு வருகின்றனர் என்றும் அவர்கள் கேட்பது பணம் அல்ல, உணவுக்கு தேவையான பொருட்கள்தான் என்றும் கூறியுள்ளார். தன்னால் எல்லோருக்கும் உதவ முடியவில்லை என்று கூறியுள்ள லாரன்ஸ், இதுகுறித்து தனது தம்பி எல்வினிடம் பேசிய போது அவர், மற்ற நண்பர்களிடம் உதவி கேட்கலாம் என்று கூறினார்.

100 மூட்டை அரிசி
இந்த யோசனையை தன்னுடைய குருவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறியதாகவும் அவர் 100 மூட்டை அரிசி வழங்கியதாகவும் கூறியுள்ளார் லாரன்ஸ். இதைத்தொடர்ந்து இந்த முயற்சியில் கைக்கோர்க்க பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் லாரன்ஸ்.

லாரன்ஸ் வேண்டுகோள்
அதன்படி நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என உதவ விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











