சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி!

சென்னை: சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்குகிறார்.

பெரும் தடங்கல்களுக்கு பின்னர் ஒருவழியாக இந்தப் படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. ஆனால் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது படக்குழுவில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஹைத்ராபாத்தில் ஷூட்டிங்

ஹைத்ராபாத்தில் ஷூட்டிங்

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட கடந்த மார்ச் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், 30 நாட்களுக்கு மேலாக தனது காட்சிகளை நடித்து கொடுத்தார்.

80 சதவீத காட்சிகள்

80 சதவீத காட்சிகள்

மொத்தமாக 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 20 சதவீத காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் ஹைத்ராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார்.

இரண்டாவது அலை

இரண்டாவது அலை

ரஜினிகாந்த் சென்னை திரும்பிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கா பயணம்

அமெரிக்கா பயணம்

இதன் காரணமாக படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

தனி விமானம் மூலம்

தனி விமானம் மூலம்

அதேநேரத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளார்.

Recommended Video

Annathe Shootingல Rajini Sir செமையா கலாச்சாரு | Meena Annathe Shooting Experience
மத்திய அரசு அனுமதி

மத்திய அரசு அனுமதி

தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதிக்காக கோரிக்கை விடுத்திருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினிகாந்தின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு

சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு

இதனை தொடர்ந்து 14 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்ட சிறப்பு விமானத்தில் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்ல உள்ளனர். ரஜினிகாந்த் மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர், சிறிது காலம் அங்கு ஓய்வெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எப்போது செல்கிறார்?

எப்போது செல்கிறார்?

ஆனால் ரஜினிகாந்த் எப்போது அமெரிக்கா செல்கிறார் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அண்ணாத்த படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்த கையோடு அவர் அமெரிக்கா புறப்படுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X