யார் பார்த்த வேலை இது?: தேவையில்லாமல் திட்டு வாங்கும் ரஜினி
சென்னை: யாரோ செய்த காரியத்திற்காக தேவையில்லாமல் ரஜினிகாந்த் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அவர் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறார்.

ரஜினி ஒன்றும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் வைத்தது தான் பிரச்சனை ஆகிவிட்டது. தண்ணீர் பந்தலை வைத்துவிட்டு பானைகளை ஒரு டப்பாவுக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
அதை யாரோ புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுவிட்டனர். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் தான் ரஜினியை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் செய்த தவறுக்கு பாவம் ரஜினி திட்டு வாங்குகிறார்.
சிலரோ ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். செய்வதை ஒழுங்காக செய்யுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள் என்று நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
யாரோ செய்த தப்புக்கு அந்த மனுஷன் என்ன செய்வார் பாவம்.


Click it and Unblock the Notifications











