AVM சரவணன் மறைவு.. தலைவருக்கு பறந்த துக்க செய்தி.. நன்றிகளை நினைத்து பெரும் சோகத்தில் ரஜினி

சென்னை: தென்னிந்திய திரையுலகை மொத்தமாக கவலையில் ஆழ்த்தியுள்ளது AVM சரவணன் அவர்களின் மறைவு. நேற்று அதாவது டிசம்பர் 3ஆம் தேதி தான் தனது 86வது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார். இப்படி இருக்கும்போது இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி அவர் மறைந்தது, பலருக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் AVM சரவணன். அவரது மறைவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. AVM சரவணனை நினைத்து சூப்பர் ஸ்டார் பெரும் துக்கத்தில் இருக்கிறார்.

தனது பட ப்ரோமோஷன் ஒன்றில் சூப்பர் ஸ்டார் பேசும்போது AVM சரவணன் சரவணன் குறித்து பேசுகையில் தனக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்ததே AVM சரவணன் தான் என்று கூறினார். AVM சரவணன் குறித்து ரஜினி பேசுகையில், " எனக்கு அப்போது சினிமா வியாபாரங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. அப்போது AVM சரவணன் என்னைத் தொடர்பு கொண்டு, எனது சம்பளம் எவ்வளவு என்று கேட்டார். நான் உடனே 35 ஆயிரம் என்று சொன்னேன்.

Rajinikanth Getting Deep Sad After AVM Saravanan Death And he Cancelled Jailer 2 Shooting For Pay Last Respect To Him
Photo Credit:

மறக்க முடியாத சம்பவம்: உடனே அதிர்ச்சி ஆன அவர், உனக்கு உன்னோட படம் எப்படி பிசினஸ் செய்கிறது என்று கூட உனக்குத் தெரியவில்லையா? உனது படம் பிச்சுக்கிட்டு வசூல் கொட்டிக்கிட்டு இருக்கு. இது தெரியாமல் இருக்குறியா? என்று கேட்டார். அடுத்த எங்கள் தயாரிப்பில் ஒரு படம் நடி, அந்த படத்திற்கு ஒரு லட்சம் சம்பளமாக கொடுக்கிறேன், ஒரு லட்சம் வேண்டாம், ராசியாக இருக்காது, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொள் என்று சொன்னார். அப்படி நடித்த படம் தான் முரட்டுக் காளை" என்று சூப்பர் ஸ்டார் கூறியிருந்தார்.

பெரும் சோகம்: இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பாளர் AVM சரவணன் மற்றும் அவரது தந்தை AV மெய்யப்பன் செட்டியார். இப்படி இருக்கும்போது AVM சரவணனின் மறைவு என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. AVM நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் கடைசியாக நடித்த படம் சிவாஜி. இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாறி வசூல் குவித்தது. தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் கோவாவில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு, உடனே சென்னைக்கு வந்து, AVM சரவணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார் என்று கூறப்படுகிறது. அவரது மறைவு தனிப்பட்ட முறையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை மிகவும் பாதித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X