கலைஞானத்திற்கு வீடு பரிசு.... சொன்ன வாக்கை காப்பாற்றிய ரஜினிகாந்த்
Recommended Video
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்தது போலவே, தற்போது ஒரு கோடி ரூபாய் செலவில் வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான கலைஞானத்துக்கு சமீபத்தில் திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் பிரபலமான நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகுமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவகுமார் பேசியபோது, கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, அந்த வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன். விரைவாக கலைஞானம் அவர்களுக்கு வீடு பாருங்கள். 10 நாட்களுக்குள் பணத்தை தருகிறேன் என்று கூறினார்.
இயக்குனர் பாரதிராஜா கலைஞானம் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை தேடிப்பிடித்தார். ரஜினி மொத்த பணத்தையும் அளித்து அந்த வீட்டை கலைஞானத்துக்கு பெற்று கொடுத்துள்ளார். புகழ்பெற்ற தயாரிப்பாளரான கலைஞானத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வீடு வாங்கி கொடுத்துள்ள சம்பவமானது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கலைஞானம் கூறுகையில், ரஜினிக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவருடைய முதல் பட வாய்ப்பை நான் அளித்தேன். அவ்வளவுதான். ஆனா எனக்கு எவ்வளவு பெரிய உதவியை ரஜினி செய்துள்ளார். இது அவருடைய பரந்த மனசை வெளிப்படுத்துகின்றது, என்று பாராட்டினார்.
ஏற்கனவே ரஜினி நடித்து பெரிய வசூலை பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் தன் லாபத்தின் பாதியை கலைஞானத்துக்கு அளித்து அவரது வாழ்வை சரிவிலிருந்து மீட்டார். மீண்டும் சரிவடைந்துள்ள கலைஞானத்தின் வாழ்க்கையை ரஜினி சீர்தூக்கியுள்ளார் என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.


Click it and Unblock the Notifications











