Jailer 2: ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி இதுதான்.. பளிச்சுனு சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் திசையில் இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அப்படி இருக்கையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறது என்று அறிவிப்பே ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டில் இருந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பரான ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்தாலே மிகப்பெரிய வெற்றி என்று ஒட்டுமொத்த திரைத்துறையினர் நினைக்கும் அளவுக்கு இவர்களின் காம்போ கடந்த காலங்களில் பல வெற்றிகளை கொடுத்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் கேரளா, கோவா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல் இந்த படத்தில் முதல் பாகத்தில் அல்லாத பலரும் புதிதாக இணைந்துள்ளனர்.

ரசிகர்கள் கேள்வி: படத்தின் கதை முதல் பாகத்தில் இருந்து தொடங்குகிறதா அல்லது முதல் பாகத்திற்கு முந்தைய கதையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்து அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.
ரிலீஸ் தேதி: இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்து விட்டது. கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். நானும் கமலஹாசனும் இணைந்து நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது என்று தெரிவித்தார். வழக்கமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொருத்தவரையில் ஒரு படத்தில் நடித்து முடித்து அந்த படம் ரிலீஸ் ஆன பின்னர் தான் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அந்த வகையில் ஜூலை மாதத்திலோ அல்லது ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலோ ஜெயிலர் 2 படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்று பலரும் சூப்பர் ஸ்டாரின் இந்த பேட்டிக்கு பிறகு பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











