twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒய் ஜி மகேந்திராவின் நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினி...அப்படி என்ன செய்தார்?

    |

    சென்னை : ஜூன் 26-ஆம் தேதியை நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் 'சாருகேசி' நாடக குழுவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாக மாற்றியுள்ளார் ரஜினிகாந்த். இது தொடர்பாக பேசிய ஒய் ஜி மகேந்திரா கூறியது பின்வருமாறு:

    Rajinikanth gives surprise to Y.G.Mahendras drama troop

    "உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினிகாந்த் என்னோடு பழகி கொண்டு இருக்கிறார். குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிக பெரிய ரசிகர். சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளேன். அதை தொடர்ந்து திடீர் என்று ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. நாரதகான சபாவில் நடைபெறும் சாருகேசி நாடகத்தில் ரஜினிகாந்த் பார்வையாளராக கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    பசங்க படத்துக்காக 27 தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன்.. இயக்குனர் பாண்டிராஜ் சொன்ன பகீர் தகவல்!பசங்க படத்துக்காக 27 தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன்.. இயக்குனர் பாண்டிராஜ் சொன்ன பகீர் தகவல்!

    சொன்னதைப் போலவே அவர், அவரது மனைவி மற்றும் மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார். என்னை கட்டிப்பிடித்த அவர், இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான் பார்த்தேன் என்று கூறியதை விட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை.

    மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினிகாந்த் அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார். அன்று இரவு நாடகத்தின் கதாசிரியர் வெங்கட் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு வெகு நேரம் பேசியுள்ளார். அந்த நாடகம் அவரிடம் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    ஜூன் 25-ஆம் தேதி ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. சாருகேசி குழுவினரை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறினார்கள்.
    ஜூன் 26 அன்று ஒட்டுமொத்த குழுவும் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். அப்பொழுது ஒவ்வொருவராக ரஜினிகாந்த் பாராட்டினார். மேலும் அவரது நாடக அனுபவங்களை பற்றி கூறினார்.

    "ஒரு நாடக ஒத்திகைக்கு எனது நண்பர் ராஜ் பகதூர் அழைத்து சென்றிருந்தார். அன்று துரியோதனனாக நடிக்க வேண்டியவர் வராததால் அவருக்கு பதிலாக என்னை நடிக்கும்படி அந்த குழுவினர் கேட்டுக்கொண்டனர்," என்று ரஜினி தெரிவித்தார். ஒத்திகையில் அவரது நடிப்பை கண்டு வியந்த குழுவினர் அவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அவரது நண்பரின் ஊக்கத்தில் அந்த நடத்தில் துரியதோனனாக நடித்தார். அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    பாராட்டு பெற்ற அந்த ஒரு தருணம் தான் எனது வாழக்கையையே திசை திருப்பியது என்று அவர் கூறினார். அது தான் தனது நடிப்பு வாழ்க்கைக்கு ஆரம்பமாக இருந்தது என்றும் அவர் பெருமையாக கூறினார். ரஜினி, ஒரு ரசிகராக எங்களிடம் பழகியது எங்கள் வாழ்வின் மிகவும் சிறப்பான ஒரு தருணம்." இவ்வாறு ஒய் ஜி மகேந்திரா கூறினார்.

    English summary
    Recently Rajini along with his wife and daughter to go to watch Y.G.Mahendra's drama which was titled as Charukesi. Rajini highly appreciated this drama and specially invite the drama troop members to his house. He prasied everyone personally. It was a sweet suprise to the troop. Y.G.Mahendra shared this info now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X