இன்று இரவு அமெரிக்கா பறக்கும் ரஜினி.. அரசியல் கட்சி, காலா ரிலிஸுக்கு இடையே சின்ன பிரேக்!

By Vignesh Selvaraj

Recommended Video

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்!- வீடியோ

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் அங்கு 2 வாரங்கள் ஓய்வெடுக்க இருக்கிறார். தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் அங்கு 2 வாரம் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக பெயர் மாற்றிய ரஜினி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார். மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

Rajinikanth goes america tonight

சமீபத்தில் ஓய்வெடுப்பதற்காகவும், குழப்பங்களிலிருந்து விடுபடவும் இமயமலைக்குச் சென்ற ரஜினி திரும்பியபின் தனது மன்ற நிர்வாகிகளின் நியமனம் தொடர்பாக தனது மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து பணிகளை மேற்கொண்டார்.

ஏப்ரல் மாதத்தில் ரஜினி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்பட்டு வந்த நிலையில் தற்போதைக்கு ரஜினிகாந்த் அது பற்றிய அறிவிப்பை வெளியிடும் முடிவில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் இன்று இரவு அமெரிக்கா செல்கிறார். 2 வாரம் மருத்துவ சிகிச்சைக்காக அங்கு தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 'காலா' பட ரிலீஸுக்குள் அவர் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X